சேக் முஹம்மது, கோவை

வரலாற்றின் வழி தனது பாரம்பரியத்தை அறிந்து மரபை அறிந்து அவர்களின் பட்டறிவான அனுபவ அறிவை உள்வாங்கி அதன்படி செயலாற்றுவதுதான் உண்மையான கல்வி என்பதை தலையங்கம் உணர்த்தியது. இன்றைய கல்வி முறை அனுபவ அறிவை புறந்தள்ளி விட்டு வாழும் நிலத்தின் தன்மையை படிப்பவர்களுக்கு உணர்த்தாமல் வெறும் தகவல்களை மட்டும் மாணவர்களின் மூளைக்குள் திணிக்கும் இன்றைய கல்வி முறையின் ஆபத்தை இன்றைய தலைமுறை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறது.