முகம்மது அப்பாஸ்,

வலிமையான வணிகச் சமூகம் கட்டுரை ஊக்கப்படுத்தும் ஆக்கமாக உள்ளது. நீண்ட தமிழ கடற்கரையின் ஓரங்களின் தொடர்ந்திருக்கும் முஸ்லிம்களின் வரலாறு தமிழகத்தின் வணிக வரலாறாகவே இருக்கிறது. தமிழக மன்னர்களின் அரசவையிலும், ஏற்றுமதி இறக்குமதியிலும் சிறப்பாக பங்களிப்பு செய்த தமிழக முஸ்லிகளின் வரலாற்றுப் பின்னடைவு இன்றும் சரி செய்யப்படாமல் தொடர்வது வேதனையளிக்கிறது. பன்னாட்டு வணிக நிறுவனங்கள், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வியாபரம் செய்வதும் தொழில் துறையில் ஈடுபடுவதும் மிகக் கடினமாக இருக்கும் சூழலில் பொருளாதார வழிகாட்டுதல் அவசியம். அதை உணர்ந்து வணிகம் செய்ய ஊக்கப்படுத்து ஒரு தொடர் கட்டுரையை கொண்டு வரும் சமூகநீதிமுரசுக்கு நன்றி.