அஜ்மல்

நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமியற்றும் துறை, பத்திரிக்கைத் துறை ஆகிய நான்கும் நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள். இந்த நான்கில் ஏதாவது ஒன்று சரிந்தால் ஜனநாயக மாளிகையே சரிந்துபோகும். நான்கு துறைகளில் ஏதாவது ஒன்று நம்மை கைவிட்டாலும் நீதித்துறை நமக்கு இருக்கிறது என்ற ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருந்த நம்பிக்கை நான்கு நீதிபதிகளும் வீதிக்கு வந்த போது கொஞ்சம் ஆடித்தான் போனது. இருந்தாலும் நீதிசெலுத்த முடியவில்லை என்ற குற்றவுணர்வுள்ள நீதிபதிகள் இன்னும் இருக்கிறார்கள். நீதித் துறை மீதான நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கை வைப்போம்.