ஜமீல் அஹ்மது, சென்னை

சென்ற மாத இதழ் தலையங்கம் படித்த போது அகமகிழ்ந்து போனேன். கலையிழந்து வரும் மதரஸாக்களுக்கு புத்துயிர் ஊட்டும் விதமாகவும் வரலாறு முழுவதும் முஸ்லிம்களது அறிவுக்கு ஊற்றாக இருந்த மதரஸாக்களை மறு உயிர்ப்பு செய்யும் விதமாக ஒரு மதரஸா ஆரம்பிக்கப்பட இருக்கிறது என்ற செய்தியை படித்தவுடம் உள்ளபடியே மேலான மகிழ்ச்சி அடைந்தேன். அல்லாஹ் உங்களுக்கு எல்லா விதத்திலும் பக்கபலமாக இருந்து உதவி செய்வான். நானும் எனது குடும்பத்தார்களும் துஆ செய்கிறோம்.