நைனார் முஹமது, மயிலாடுதுறை

துபாயில் நடந்து முடிந்த தமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு 2018 குறித்த செய்திகளையும், படங்களையும் பார்த்த போது உள்ளபடியே அகமகிழ்ந்து போனேன். தமிழ் முஸ்லிம் சமூகத்தில் ஒரு வியாபார கூட்டமைப்பு இல்லையே என்கிற கேள்வி என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அதை போக்கு விதமாக இந்த வர்த்தக மாநாடு ஒரு கூட்டமைப்பாக உருவானால் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களில் இருந்து பல சிறு குறு தொழில் முனைவோர்களை உருவாக்க முடியும். அதற்கான முன்னெடுப்புகள் நடைபெற வேண்டும். முஸ்லிம் சமூகத்தை முன் நகர்த்தும் உங்கள் பணிகளுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக.