சேக் முஹம்மது, பொள்ளாச்சி

சுன்னத் வல் ஜமாஅத் என்றால் யார் என்று இவ்வளவு  நாட்களாக  தெளிவில்லாத  ஒரு குழப்பம் இருந்து வந்தது.  கான் பாக்கவி அவர்கள்  இளம்  ஆலிம்களுக்கு  எழுதி தொடர்  கட்டுரையில்  சென்ற  மாதம் எழுதிய அதென்ன சுன்னத் வல் ஜமாஅத் கட்டுரை தெளிவாக எழுதப்பட்டு இருந்தது. அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களுக்கு  ரஹ்மத்  செய்வானாக.  இது போன்ற எண்ணற்ற குழப்பமான, சிக்கலான விசயங்களுக்கு  கான்  பாக்கவி  ஹஸ்ரத் அவர்களிடமிருந்து தெளிவான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.  ஹஸ்ரத  அவர்களின் கட்டுரை இளம் ஆளிம்களுக்கு மட்டுமல்ல என்  போன்ற  பாமரர்களுக்கும் பயனுள்ளதாக  இருக்கிறது. அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் ஈருலக வாழ்க்கையையும் சிறப்பாக்குவானாக.