அப்துல் முனாஃப், தாம்பரம்

மே மாத சமூகநீதி முரசு இதழில் வெளியான “ஆசிபா எனும் அழுகுரல்” கட்டுரையை படித்த போது அதிர்ந்து போனேன்.
இந்த கொடூரம் வரலாற்றின் தொடர்ச்சி என்பதை அறிந்த போது என்னால் யோசிக்கவே முடியவில்லை. இப்படி ஒரு குற்றத்தை செய்தவர்கள் என்ன மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை மனிதர்களாக வகைப்படுத்த முடியாது. கட்டுரையாளர் சொன்னது போல இவர்கள் எருமை மாடுகள் அல்ல! அதை விட கேடு கெட்டவர்கள். தான் இவர்கள். அல்லாஹ் நமது சந்ததிகளை கொடுமதியாளர்களிடமிருந்து காப்பாற்றுவானாக.