முஹம்மது சித்தீக். சென்னை

ஜூலை மாத தலையங்கம் மிகச் சிறப்பான
ஆக்கம். பொருளாதாரத் தேவைகளுக்காக நகரங்களைத் தேடி வரும் முஸ்லிம் குடும்பங் களின் நிலையைச் சொல்லி மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை. ஊர்ப்புறங்களில் உள்ள மஹல் லாச் சூழலை நகரங்களில் பொருத்திப்பார்க்க முடியவில்லை. நகரங்களின் வாழ்க்கை முறையும் பளபளப்பும் பொருளாதாரத்தை தேடி பித்துப் பிடித்து அலையவைக்கிறது. மனைவி மக்களோடு உறவுகளோடு மகிழ்ச்சி யாகப் பேசும் சந்தர்பங்கள் அரிதாகி வலுக் கட்டயமாக வரவழைத்துக் கொண்ட சிரிப்
போடுதான் யாரையும் எதிர்கொள்ள முடிகிறது.
ஊர் மக்களோடு உறவுகளோடு மஹல்லாவில் கலந்து வாழும் பாக்கியத்தை எல்லோருக்கும் அல்லாஹ் வழங்குவானாக. ஆமீன்.