ரமீஸ்தீன், பம்பாய்

பொய்களின் அரசியலும் அரசியல் பொய்களும் கட்டுரை இன்றைய அரசியல் நிலவரத்தை யும், அரசியல்வாதிகளின் அவலத் தையும் கட்டுரையின் ஒவ்வொரு பத்தியிலும் சுட்டிக் கொண்டே வந்தது. உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை பொய்களால் நிரம்பி வழிகிறது. அதிலும் குறிப்பாக சமீப காலங்களில் உலக நாடுகள் பலவற்றில் வெற்றி பெற்று வரும் இனவாத அரசியல்வாதிகளின் பொய்கள் விஷக் கருத்துக்கள் உண்மைகளைப் போல பரப்பப்பட்டு வருகிறது. அதனால் மனிதர்கள் சக மனிதர்களை வெறுக்கும் நிலை உருவாகி வருகிறது. அது உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு இது போன்ற தொடர் கட்டுரைகள் வரவேண்டும்.