முஹம்மது அமீன், வில்லிவாக்கம்

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பற்ற நிலை… கட்டுரை நிகழ்காலக் கண்ணாடி. பசுக்களின் பெயர்களால் மனிதர்கள் கொல்லப்படுவது, குறிப்பாக முஸ்லிம்கள் கொல்லப்படுவது, தாக்குதலுக்குள்ளாவது அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இந்த தாக்குதல்களை நியாயப்படுத்துபவர்களைப் பார்க்கும் போது இந்திய மக்களின் மனதில் வெறுப்புத் தன்மை வளர்க்கப்பட்டு மனிதத் தன்மை குறைந்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அல்லாஹ் இந்த மோசமான சூழலை எதிர்கொள்ள முஸ்லிம்களுக்கு உதவி செய்வானாக.