அப்துல்ஹாதி பாகவி

மார்ச் 2017 இதழின் தலையங்கம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தேர்வுக்கு மேல் தேர்வு, தேர்வுக்கு மேல் தேர்வு என்று தொடர்கிறதே தவிர, அது முடிவடைவதில்லை. இதனால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அறிவு வளர்ச்சியும் ஏற்படுவதில்லை. சுமைதான் மிகுதியாகின்றது. மேலும் பெரும்பாலான மாணவர்கள் வாய்ப்பை இழக்க நேரிடுகின்றது.
இப்போது தேர்வு நடத்துவதன்மூலம் நிறையப் பணம் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் டி.என்.பி.எஸ்.சி. உள்பட எல்லாத் தேர்வு ஆணையங்களும் இயக்ககங்களும் தேர்வுக் கட்டணத்தை உயர்த்திவிட்டன. ‘நீட்’ தேர்வின்மூலம்தான் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை என்றால் +2 தேர்வு ஏன்? ஆசிரியராவதற்காக பி.எட். படித்தபின் T.E.T. தேர்வு ஏன்? தேர்வுக்கு மேல் தேர்வு எனும் நடைமுறை மாணவ, மாணவிகளுக்கான ஒரு சுமையே தவிர எந்த இலாபமும் அவர்களுக்கு இல்லை. அதேநேரத்தில் அதை நடத்துபவர்களின் இலாபமும் அதற்கான பயிற்சி நிலையங்களின் இலாபமும் அதனுள் மறைந்துள்ளது உண்மை.