காதர் முஹ்யித்தீன், திருவாரூர்

வலுவான குடும்பம் பலமான சமூகம் கட்டுரை இன்றைய குடும்ப வாழ்வின் யதார்த்தத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது. கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது குடும்ப அமைப்பின் சீரழிவு சமூகத்தை சீரழித்திருக்கிறது. பொருளாதார சுமைகளை கூட்டி உறவுகளை வெறுக்க கற்றுத் தந்திருக்கிறது. முஸ்லிம்களும் விதி விலக்கில்லாமல் இந்த அநாகரீகத்தில் தங்களை பங்காளிகளாக ஆக்கி இருப்பது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்து. ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாம் கூறும் உறவுமுறைகளை பேணுவது, இஸ்லாமிய அடிப்படையில் குடும்பங்களை உருவாக்குவது அவசியத்திலும் அவசியமான ஒன்று.