அன்வர், மேலப்பாளையம்

நானிலம் குழுமும் நாகூர் தொடரில் நாகூரின் வரலாற்றுச் சிறப்புகளை யும், நாகூரின் தோற்றம் குறித்தும் அருமையாக விளக்கிய கட்டுரையாசிரியர் நாகூர் தர்காவின் நடக்கும் மார்க்கம் அனுமதிக்காத, மார்க்க விரோத செயல்பாடுகளை சொன்னாலும், நாகூர் தர்காவின் சிறப்புகளை சிலாகித்து எழுதப்பட்டிரு ந்தது. தர்காவில் காணிக்கை நிறைவேறுவதாகவும், கந்தூரி காலங்களில் மக்கள் பெரும் தொகையினர் குழுமுவதாகவும், தப்ஸ் நாதம் காதுகளை குளிர்விப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்விப் பணியில் கவனம் செலுத்து சமூக நீதி முரசு மாத இதழ் இது போன்ற தர்காவை ஆதரிப்பது போன்ற செய்திகளை எழுதும் போது கவனமாக இருப்பது நல்லது என்று நான் கருதுகிறேன்.