ஜன்னத் பேகம். சேலம்

களத்து மேடு
சர்க்கார் அம்மா சுல்தான் ஜஹான் பேகத்தின் வரலாற்றுக் குறிப்புகளை படித்த போது மெய்சிலிர்த்துப் போனேன். சிறுவயதிலிருந்து அவர்கள் இஸ்லாமிய மரபில் பயிற்றுவிக்கப்பட்ட விதம் அதில் தன்னை மெருகேற்றிக் கொண்டு ஒரு ஆட்சியாளராக முன்னிலைப்படுத்தி ஆளுமை செலுத்திய பண்பு, பெண்கள் மேல் கரிசணம் கொண்டு அவர்களுக்காக, கல்விக் கூடங்களையும் மருத்துவமனைகளையும் திறந்து வைத்தது என அனைத்தையும் படித்த போது ஒரு பெண்ணாக நானும் பெரு மகிழ்ச்சி கொண்டேன். எனக்கான முன்னோடியாக அவரை எண்ணுகிறேன்.