தாஜூதீன், திண்டிவனம்

சமூக நீதி காத்த மண், பெரியார் பிறந்த மண் என்ற பெருமை கொள்ளும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் வந்த சோதனை இன்றைய தமிழக ஆட்சியாளர்கள். “தடுக்கப்படுகிறதா தமிழகத்தின் வளர்ச்சி” கட்டுரை சிறப்பான ஆக்கம். அதில் குறிப்பிடப்பட்டிருப்பது போல தமிழகத்தின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அரசியல்வதிகளால் சாதிக்கப்பட்டது அல்ல! சமூக சீர்திருத்தவாதிகளால், மக்களின் போராட்டங்களால் வென்றடுக்கப்பட்டவை. இன்றும் அது போன்ற முன்னெடுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. வருங்காலத்தில் தமிழகம் மேலும் வளர்ச்சி காணும் என்று நம்புவோம்.