அப்துல் ரஹ்மான், மதுரை

மதுரை வீதிகளில் சில வருடங்களுக்கு முன்னாள் நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் “கம்ப ராமாயணம்” குறித்து உரையாற்றுகிறார் என்ற சுரரொட்டிகளை பார்வையாலே கடந்து போயிருக்கிறேன். அப்போது அவர் குறித்து பெரிதாக ஒரு கவனம் இருந்ததில்லை. சமூகநீதி முரசு இதழில் மீண்டும் அதே மு.மு. இஸ்மாயீல் என்ற பெயர் பார்த்ததும் ஒரு ஆர்வத்தில் முதல் தலை மனிதர்கள் கட்டுரையை படித்து முடித்தேன். நீதித் துறையில் அவரது பணி, இலக்கியத்துறையில் அவரது ஈடுபாடு யாவும் எப்படி அவருக்கு சாத்தியமானது என்று ஆச்சிரியமாக இருந்தது. அவரைப் போன்று முஸ்லிம்களுக்கும் பிறமத சகோதரர்களுக்கும் பாலமாக இருக்கும் மனிதர்கள் இன்று தேவைப்படுகிறார்கள்.