முருக்கங்குடியில் கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்

மரககஙகடயல கலவ மறறம சமக வழபபணரவ கரததரஙகம
தஞ்சை மாவட்டம் குடந்தை (கிழக்கு) வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் முருக்கங்குடியில் நடைபெற்றது. மார்க்க கல்வியும் உலக கல்வியும் இணைந்தது தான் இஸ்லாமியக் கல்வி என்று உலமாக்களே உடைத்துப் பேசியது நிறைவாக இருந்தது.
கல்வி என்பது ஒன்று தான் மார்க்கத்தின் நிழலில் தான் உலகத்தின் அறிவை பெற வேண்டும். அது தான் ஹலாலான அறிவு அரபு மதரஸாக்களில் பள்ளி இறுதி தேர்வு எழுத பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று பேசியதற்காக பல முறை நான் அவமானபடுத்தப்பட்ட நிகழ்வுகள் வாழ்வில் பதிவாகியுள்ளன அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கல்வி ஒன்று தான் என்ற கருத்து பெருகி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்