கைவிடப்படும் குழந்தைகள்..

இந்தியாவில் பொது சுகாதாரம் பல நூறு குழந்தைகளை பலிவாங்கி கொண்டு பல்லிளித்து நிற்கிறது. இரு மாதங்கள் முன்னர் உத்தர் பிரதேசத்தில் கோரக்பூர் மருத்துவமனையில், செயற்கை மூச்சுக் காற்று இல்லாமல் நூற்றுக்கும் மேலான குழந்தைகள் இறந்தார்கள். அந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு வழக்கமானது தான்,செயற்கை காற்றுருளை தரும் நிறுவனத்துக்கு காசு பாக்கி இருந்ததால், வினியோக நிறுவனம் உருளையை நிறுத்தியது, குழந்தைகள் உசுரு நின்னு போச்சுனு உணர்ச்சி மரத்துப்போன குரலில் மருத்துவமனை நிர்வாகம் சொன்னது. அதிகாரிகள் ஒரு சிலரை பொறுப்பாக்கி ஆதித்யநாத் அரசு, இதற்கு நாங்கள் காரணமில்லை என்று தப்பித்தது.
மாராட்டியம் மாநிலம் நாசிக்கில் உள்ள நாசிக் சிவில் மருத்துவமனையில், ஆகஸ்ட் மாதம் பிறந்த குழந்தைகளில் 55 பேர் இறந்தனர். நாசிக் மருத்துவமனையின் பொது சுகாதார லெட்சனம் என்னவென்று அப்போது விளங்கியது.
ரோகினி கேதடே, வயது 22, தனக்கு ஆண் குழந்தை பிறந்த 10 நாட்களில் இரண்டு முறை தான் கைகளில் தூக்கி கொஞ்சி இருக்கிறாள். பிறந்து 32 வாரங்கள் ஆன நிலையில் குழந்தையை சிறப்பு கவனிப்பு பிரிவுக்கு (Special newborn care unit) கொண்டு போனார்கள். X-ray, Sonography உட்பட நான்கு டெஸ்ட் மட்டும் எடுத்திருக்கிறார்கள். பிறக்கும் போது குழந்தை 1.6 கிலோ கிராம் தான் இருந்திருக்கிறது. குழந்தை பால் குடிக்க மறுத்தத்தால் அதன் நிலைமை மேலும் மோசமானது என்று மருத்துவர்களும், செவிலியர்களும் கூறினார்கள். குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. இங்கு அதை செய்ய முடியாது. வேறு மருத்துவமனைக்கு கொண்டு போகும்படி ஒரு குழந்தை நல மருத்துவர் கூறிய உடனே சுதாரித்து, நாசிக்கில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள சின்னரில் ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்தேன் என்கிறார் காவல்துறை அலுவலரான குழந்தையின் தந்தை தத்து கேதடே.
குழந்தையை நாசிக் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வராமல் இருந்திருந்தால் குழந்தை இறந்திருக்கும். குழந்தைக்கு சலைன் ஃபோர் என்ற மருந்தை சரியாக கொடுக்காத்தால், நோய் தொற்று அதிகரித்திருக்கிறது. இடது கை நான்கு நாட்கள் வீங்கி இருக்கிறது என்று குழந்தை மருத்துவர்கள் சொன்னார்கள் என்கிறார் கேதடே. சின்னர் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் வெண்டிலேட்டரில் வைத்த பிறகு தான், குழந்தை பால் குடிக்க தொடங்கி இருக்கிறது. அதன் எடையும் படிப்படியாக கூடி இருக்கிறது. இதற்கே, இரண்டு நாட்களுக்கு 10,000 ரூபாய் என்று பில் கொடுத்திருக்கிறார்கள்.
நாசிக் அரசு மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவில் ஆகஸ்ட் மாதம் 55 குழந்தைகள் மரணித்திருக்கிறார்கள். அவர்கள், எடை குறைந்தும், கால முதிர்வு இல்லாமலும் [குறைமாதத்திலும்] பிறந்த குழந்தைகள்.
இது இரண்டாம் நிலை மருத்துவமனை (secondary health care center ). இங்கு 2 கிலோ கிராமுக்கு குறைந்த எடையுடன் பிறந்த அநேக குழந்தைகள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். 2 கிலோவுக்கு குறைவான குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதிகள் இல்லையாம். நாசிக்கில் எங்கும் அதுமாதிரியான கவனிப்பு மையங்கள் இல்லையாம். நாசிக்கில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கிறது. செயற்கை மூச்சுக்காற்று வசதிகள் இருந்தாலும் அந்தக் கல்லூரி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்மைகளுக்குத் தான் கொடுப்பார்களாம்.
சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து நாசிக் வருவதற்கு ஒரு வாகனத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் 2 அல்லது 3 மணி நேரமாவது ஆகும் கடினமான சூழ்நிலையில் நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமங்களில் இருந்து நாசிக் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை கொண்டு வரும் பெற்றோர்கள் இன்குபேட்டர் வசதி இல்லாமல் திரும்பிச் செல்கிறார்கள். எங்கள் மருத்துவமனையில் 1.5 கிலோவுக்கு குறைவான எடையுள்ள குழந்தைகளை பராமரிக்கும் செயற்கை சுவாச வசதி இல்லை. அரசு விதிமுறைப்படியே, இரண்டாம் மட்ட மருத்துவமனைகளுக்கு செயற்கை சுவாச வசதிகள் கிடையாது என்பதே கசப்பான உண்மை என்கிறார் டாக்டர் பங்கஜ் கஜாரே.
2017, ஏப்ரல் மாதத்தில் இருந்து 1,492 பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பிரிவில் வைத்து கவனிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் 187 குழந்தைகள் இறந்துள்ளன. 2013 ல் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பிரிவு துவக்கப்பட்டது. அன்று முதல் இதுவரையில்,13,885 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில்,2,885 குழந்தைகள் இறந்துள்ளார்கள். இந்த குழந்தைகள் வெகு தொலைவில் இருந்து வந்தவர்கள் என்கிறார் டாக்டர் பங்கஜ்.
கடும் எடை குறைவுடைய குழந்தைகள் பிறந்து இரண்டு மணி நேரத்துக்குள் சிகிச்சை பெறவில்லை எனில் அவர்களுக்கு hypoglycemia அல்லது low blood sugar பிரச்சனைகள் வந்து விடும். ஒரு முறை blood sugar level 40mg/dL க்கும் கீழாக குறைந்தால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு விடும். ஒவ்வோரு ஒன்று அல்லது இரண்டு மணி நேர இடைவெளியில் குழந்தைக்கு உணவு புகட்டும் தேவை இருந்தாலும் நுரையீரல் சம்பந்தமான கோளாறு உண்டாவதால் டாக்டர்களால் உணவு புகட்ட முடியாது.
உதாரணமாக, சோனு சக்ரூஷெத் என்ற 20 வயது பெண் குறைமாத குழந்தையை பெற்றுக்கொண்டு முடேகாவோனில் இருந்து நாசிக் மருத்துவமனைக்கு 336 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்தாள். அவளது குழந்தை ஒரு கிலோவுக்கும் குறைவாக இருந்தது. தாய் சோனுவே 35 கிலோ தான் இருந்தாள். கற்பகாலத்தில் கணவனுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்திருக்கிறாள். கற்ப காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்று எனக்கு யாரும் சொல்லவில்லை, கற்பகாலத்தில் உடல் இளைக்கக் கூடாது என்ற விபரமும் எனக்கு தெரியாது, பச்சிளம் குழந்தை சிறப்பு சிகிச்சை பிரிவில் எனது குழந்தையை அனுமதித்த பிறகு இதுவரை குழந்தையை காட்டவில்லை என்கிறாள் சோனு. அவளும் தளர்ச்சியாக இருக்கிறாள்.
எடை குறைவான குழந்தைகளை பெறும் தாய்கள் குழந்தை பெறும் போது, பெரும்பாலும் 30 முதல் 35 கிலோ எடை தான் இருக்கிறார்கள். மேலும், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பச்சிளம் குழந்தைகள் சிறப்பு கவனிப்பு பிரிவில் ஒரே சமயத்தில் 42 முதல் 67 குழந்தைகளை அங்குள்ள செவிலியர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. நியாயமாக, ஒரு நோயருக்கு ஒரு செவிலியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். 11 இன்குபேட்டருக்கு ஒரு குழந்தை நல மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறார் அம்மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரி ஒருவர்.
நாசிக் மாநகராட்சியின் நான்கு மருத்துவமனைகளில் 17 இன்குபேட்டர்கள் தான் இருக்கின்றன. செயற்கை சுவாச வசதிகளோ நீஷீஸீtவீஸீuஷீus ஜீஷீsவீtவீஸ்மீ ணீவீக்ஷீஷ்ணீஹ் ஜீக்ஷீமீssuக்ஷீமீ(சிறிகிறி) கருவிகளோ இல்லையாம். சுவாச கருவிகளையோ சிறிகிறி கருவிகளையோ அதிகரிப்பதால் பிரச்சனை தீர்ந்து விடாது. ஆரம்ப சுகாதார மையங்களில் சிறப்பு நிபுணர் இடங்கள் 60 விழுக்காடு காலியாக இருக்கின்றன என்கிறார் ஜன் ஆரோக்கியா அபியான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அபிஜித் மொரே.
கிராமப்புறம் மற்றும் மலை வாழ் பகுதிகளில் தாய்மார்கள் எடை குறைந்து உடல் மெலிந்து இருப்பது, இதுவே முறையான குழந்தை பிறப்புகள் குறைந்து வருவதற்கு காரணம் என்கிறார் டாக்டர் அபிஜித் மொரோ. மூன்றடுக்கு சுகாதார கட்டமைப்பை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். அதற்கு ஆரம்ப சுகாதார மையங்களை முதலில் பலப்படுத்த வேண்டும் என்கிறார். கிராமப்புற மருத்துவமனைகள் மகளிர் மருத்துவர்கள் (gynecologist), குழந்தைகள் மருத்துவர்கள் (paediatricians) மற்றும் பொது மருத்துவர்கள் இல்லாமல் மிகவும் சிக்கலில் இருக்கின்றன. இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய மருத்துவ கல்வித் துறை மற்றும் அரசு சுகாதாரத் துறை இடையேயான ஒத்துழைப்பை கெட்டிப்படுத்த வேண்டும். இரண்டு துறைகளுக்கும் முறையே பாஜகவும் சிவ சேனாவும் தலைவர்களாக இருக்கிறார்கள். இந்த மோசமான சூழ்நிலைக்கு இது தான் காரணம்.
கிராமப் புறங்களில் வேலை செய்ய வேண்டும் என்ற விதிமுறையை மருத்துவர்கள் தொடர்வதில்லை. இதனால் தான் கிராமப் புறங்களில் வாழும் ஏழைகள் சிரமத்தை சந்திக்கிறார்கள். பொறுப்புடையவர்கள் மெத்தனமாக இருப்பதை அரசு மருத்துவமனைகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
நாசிக் அரசு பொது மருத்துவமனையிலும் கோரக்பூர் மருத்துவமனையிலும் குழந்தைகள் இறந்ததில் இந்த கோளாறை காண முடிகிறது. இது அனைத்தும் மருத்துவ சேவைக்கு அரசு ஒதுக்கும் நிதி சம்பந்தப்பட்டது. ஆண்டு தோறும் அரசு இந்த பொறுப்பை தட்டிக் கழித்து வந்துள்ளது. உள் நாட்டு உற்பத்தியின் 4 விழுக்காட்டில் இருந்து சுகாதாரத்துக்கு 1.2 விழுக்காடு தான் ஒதுக்குகிறார்கள். பிரச்சனை வேறு எங்கும் இல்லை. இதற்கு அதிகாரிகளே காரணம் என்கிறார் ஜன் ஆரோக்கிய மன்ச் அமைப்பின் ஆர்வலர் அனூப் லதா.