செலவில்லா சித்த மருத்துவம்

111. தேமல், ஊறல், சொறி சிரங்கு, வியர்வை நாற்றம் தீர :
ஏலகிரி அம்பது கிராம், பாசிப்பயறு அம்பது கிராம், வெட்டி வேர் அம்பது கிராம், கோஸ்டம் அம்பது கிராம், சோம்பு அம்பது கிராம், ஜடாமஞ்சி அம்பது கிராம், கார்போக அரிசி அம்பது கிராம், கிச்சிலி கிழங்கு அம்பது கிராம், விளாச்சை வேர் அம்பது கிராம், கோரைக் கிழங்கு அம்பது கிராம், சாம்பிராணி நூறு கிராம், சந்தனத்தூள் அம்பது கிராம், கஸ்தூரி மஞ்சள் அம்பது கிராம், ஆவாரம்பூ நூறு கிராம் எல்லாவற்றையும் நன்கு அடைத்து வைத்து தினமும் தேய்த்து குளித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் நமது உடலில் அண்டாது.
112. இளைப்பு இருமல் தீர :
திப்பிலி எண்பது கிராம், சுக்கு, ஏலம், சீரகம், திப்பிலி வேர், வாய் விளங்கம், கடுக்காய்ம் மிளகு இவை வகைக்கு பத்து கிராம் இவைகளை இளம் வறுப்பாய் வறுத்து இடித்து சலித்து அதன் அளவு கருப்பு கட்டி சேர்த்து காலை, இரவு பாக்களவு நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர தீரும்.
113. புண்களுக்கு களிம்பு :
குங்கிலியம், கந்தகம், காசுகட்டி, வெண்காரம் இவைகளை சம அளவு எடுத்து ஒன்று சேர்த்து சிறு தீயிட்டு களிம்பாக்கி போட குணமாகும்.
114. ஒற்றைத் தலைவலிக்கு :
சிறுதுரும்பை பூ சேகரித்து இடித்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வர ஒருதலைக்0 குத்து குணமாகும்.
115. எய்ட்ஸ் நோய்க்கு :
கொன்றை, வல்லாரை, சுத்தித்த ஆகாச கருடன் கிழங்கு, சிவனார் வேம்பு, குங்கிலியம், வேம்பு, உத்தாமணி, மஞ்சள் துளசி இவைகளை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு இதிலிருந்து தினமும் காலை, மாலை ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடியை போட்டு வேக வைத்து கசாயம் செய்து நாற்பது நாட்கள் குடித்து வர மேல்கண்ட நோய் தீரும்.
116. மருத்து வேகம் மற்றும் விஷ கோளாறுகளுக்கு :
அவுரி (நீலி) இருபது கிராம், அருகம்புல் முப்பது கிராம், மிளகு அய்ந்து கிராம் எல்லாவற்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உருண்டை பிடித்து வேளைக்கு ஒரு உருண்டை வீதம் காலை, மாலை பாலுடன் சாப்பிட குணமாகும்.
117. தலைமுடி நீளமாக, கருப்பாக வளர :
தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், செம்பருத்திப்பூ நூறு எண்ணம், தேங்காய் எண்ணெயை ஒரு சட்டியில் இட்டு காய்ச்சி வரும்போது செம்பருத்திப் பூக்களை நன்கு நச்சி அந்த எண்ணெயுடன் போடவும். வெந்து சடசடப்பு அடங்கியதும் இறக்கி வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து வர தலைமுடி கருமையாக நீண்டு வளரும்.
118. சொறி சிரங்கு தைலம் :
தேங்காய் எண்ணெய் கால் லிட்டர், சுருள்பட்டை இரண்டு கிராம், கார்போக அரிசி பத்து கிராம், கந்தகம் அய்ந்து கிராம், ஊமத்தை இலைச் சாறு கால் லிட்டர், தேங்காய் எண்ணெய்யுடன் ஊமத்தை இலைச் சாற்றை சேர்த்து வைத்துக் கொள்ளவும். மற்ற மூன்று சரக்குகளையும் இடித்து தூள் செய்து மேல் உள்ள கலவையில் போட்டு பதமாக காய்ச்சி இறக்கி சொறி, சிரங்குகளுக்கு மேலால் போட்டு வர குணமாகும்.
119. வயிற்றுப் புழுக்கள் வெளியேற :
புரசம் விதையை நீரில் ஊற வைத்து உள்பருப்பை எடுத்து உலர்த்தி இடித்து பொடித்து அம்பது கிராம் அளவு எடுத்து தேனுடன் சேர்த்து தினம் மூன்று வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு ஏதாவது ஒரு மல மிளக்கி மருந்தை அதிகாலையில் சாப்பிட்டால் மலத்துடன் புழுக்கள் வெளியேறும்.
120. கண், செவி நோய்களுக்கு தைலம் :
கரிசாலை, கற்றாழை, நெல்லிக்காய் இவைகளின் சாறு வகைக்கு இருநூறு மில்லி, பசும்பால் அய்நூறு மில்லி, நல்லெண்ணெய் அய்நூறு மில்லி, நன்னாரி வேர், வெட்டி வேர், விளாமிச்ச வேர், கோஸ்டம், அதிமதுரம், சந்தனம் வகைக்கு பத்து கிராம், அரைத்து போட்டு காய்ச்சி தைல பதம் வந்ததும் வடித்து வைத்துக் கொண்டு தலைமுழுகி வர நோய் தீரும்.
121. தீக்காயத்திற்கு மருந்து :
ஒரு கப் அளவு கொழுப்பு, இரண்டு முட்டையின் வெண்கரு இவைகளை ஒன்று சேர்த்து ஒரு மெல்லிய துணியில் தடவி காயத்தின் மேல் போட்டு வந்தால் எளிதில் தீக்காயம் ஆறும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும்.
122. குடிநீரை சுத்தமாக்க :
ஒரு குடம் தண்ணீரில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நீத்தாத சுட்ட சுண்ணாம்பு பவுடரைப் போட்டு வைத்து மறுநாள் காலையில் வெகு தெளிவான சுத்தமான தண்ணீரை எடுத்து உபயோகிக்க வேண்டும்.
123. வெண்தொலி மாற :
காட்டு சீரகப்பொடி, மிளகு அல்லது எள்ளுப் பொடி சமமாக கலந்து தினமும் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீருடன் சாப்பிட வெண்தொலி கருமையாகும்.
124. குத்து இருமலுக்கு :
சிறு செருப்படை சாறு, வேப்பம் பட்டை சாறு, பொன்னாங்கன்னி சாறு சமமாக எடுத்து தேன் கலந்து வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட தீரும்.
அன்பான வாசக நண்பர்களே உங்களுக்கு தேவையான மருத்துவ சந்தேகங்களை போன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்னுடைய 65 வருட மருத்துவ அனுபவத்தில் நான் எழுதிய *செலவில்லா சித்தமருத்துவம், என்ற புத்தகத்தை ரூ.150* செய்து பெற்று பயனடைய கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவர் K.P.பால்ராஜ் TRSMRSI
செல் : 9487348763