செலவில்லா சித்த மருத்துவம்

எனது அன்பான வாசக நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். கடந்த பிப்ரவரி மாதத்தில் குழந்தைகள் பராமரிப்பு பற்றி விவரமாக எழுதி இருந்தேன். இதை படித்த அனேக தாய்மார்கள் பெண்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முறைகளைப் பற்றி எழுதச் சொல்லி எனக்கு போன் மூலம் சொன்னார்கள். ஆகவே அவர்களின் விருப்பத்திற்கு இணங்க நோய்களும் அவற்றை சித்த மூலிகை மருந்தில் குணமாக்கும் செயல் திறனையும் விவரமாக எழுதுகிறேன்.
1. குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு பிரமதண்டு அல்லது குறுக்கு முள்ளு இலைகளையும், சம அளவு கறி மஞ்சளையும் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை தூரம் ஆன மூன்று தினத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கர்ப்பப்பை கோளாறு மாறி புத்திர பாக்கியம் ஏற்படும்.
2. கர்ப்பப்பை நொய் நீங்க
கர்ப்பப்பையில் நோய் கிருமிகள் இருந்தால் கர்ப்பம் தரிக்காமல் போய்விடும். அதை நிவர்த்தி செய்ய வேப்பம் பட்டை, நன்னாரி, ஓமம், வாய் விளங்கம், ஆடுதின்னா பாளை, வரி குமட்டிக்காயின் வெள்ளை நிறத்தில் காணப்படும் உள் சதை பாகம் இவைகளை சம பாகமாக எடுத்து எலுமிச்சை பழச் சாற்றில் அரைத்து கடலை அளவு கர்ப்பப் பைக்குள் செலுத்தி வந்தால் பெண் சினைப்பையில் உள்ள நோய் நீங்கி கர்ப்பம் தரிப்பார்கள்.
3. குழந்தை பெற வருத்தப்பட்டால்
நாயின் மண்டை ஓட்டை கொஞ்சம் பொடி பண்ணி விளக்கெண்ணெயில் கலந்து உள்ளுக்கு கொஞ்சம் கொடுத்து, தொப்புள் பாகத்தில் தடவ குழந்தை உடன் பிறக்கும்.
4. நஞ்சுக் கொடி கீழே விழ
வட்ட துத்தி வேர், சீரகம், பழம்புளி, சமமாக எடுத்து நீர் சேர்த்து கசாயம் செய்து கொடுக்க நஞ்சு கொடி உடன் விழுந்து விடும்.
5. சூதகத்தில் தடை ஏற்பட்டால் :
ஆடுதின்னா பாளையின் விதையை விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட சூதக தடை நீங்கி தூரம் வரும்.
6. மாதவிடாயின் போது ஏற்படும் வலிக்கு
பெருங்காயம் ஒரு கிராம், கருப்புக்கட்டி ஆறு கிராம் இரண்டையும் சேர்த்து இடித்து காலை, மாலை வெறும் வயிற்றில் வேளைக்கு அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சூதகவலி தீரும்.
7. கர்ப்ப காலத்தில் காணும் காய்ச்சலுக்கு
சீரகம் குருந்தட்டி வேர் வகைக்கு பத்து கிராம் இடித்து கசாயம் செய்து கொடுக்க காய்ச்சல் தீரும்.
8. மாத விலக்கில் அதிக ரத்தம் போனால்
நெருஞ்சில் வேரை எலுமிச்சை சாற்றில் அரைத்து எருமை மோரில் கலந்து காலை மாலை மூன்று நாட்கள் குடிக்க ரத்தப் போக்கு நிற்கும்.
9. பெண்கள் மார்பகத்தில் ஊரல் இருந்தால்
மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரகம் மூன்றையும் சமமாக எடுத்து இடித்து காய்ச்சி மேலால் போட்டு வர தீரும்.
10. தாய்ப்பால் சுரக்க வேண்டுமா?
இலுப்பை இலைகளை பச்சையாக எடுத்து மார்பகங்களில் கட்டி வர தாய்ப்பால் நிறைய சுரக்கும்.
11. நீர்த்தாரையில் ஏற்படும் கடுப்புக்கும் ரத்த ஒழுக்கலுக்கும்.
ஆவாரை அரிசி ஒரு ஆழாக்கு, சீரகம், சந்தனம், சர்க்கரை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து இவைகளை எழுமிச்சை பழச்சாற்றில் அரைத்து காலை மதியம் மாலை ஆக மூன்று வேளை கொடுக்க வேண்டும்.
12. ஒழுங்காக வரும் விலக்கம் தடை பட்டால்
ஐம்பது கிராம் எள்ளை ஒன்னரை கிளாஸ் நீரில் போட்டு அவித்து ஒரு கிளாஸ் வந்ததும் ஐந்து கிராம் ஓமத்தை அரைத்து கலக்கி காலை மாலை இரு வேளை குடிக்க விலக்கம் வரும்.
வாசகர்ளுக்கு மருத்துவ விவரம் தேவைப்பட்டால் போன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளவும் நான் எழுதிய “செலவில்லா சித்த மருத்துவம்” புத்தகம் வேண்டுவோர் ரூபாய் நூற்றி ஐம்பது மணியார்டர் செய்து புத்தகத்தை பெற்று பயனடைய வேண்டுகிறேன்.
K.P.பால்ராஜ் RTSMP. SI
9487348703