செலவில்லா சித்த மருத்துவம்

15. வெள்ளெருக்கன் பூ இதழ் ஒரு பங்கு, மிளகு அரை பங்கு, கிராம்பு ரு பங்கு, வெற்றிலை 1/8 பங்கு சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரை செய்து உலர்த்தி காலை -மாலை 2 மாத்திரை வீதம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
16. நொச்சிப்பூ, நந்தியா வட்டப்பூ. குங்குமப்பூ, நற்சீரகம் இந்நான்கையும் இடித்து துணியில் வைத்து பிழிந்து கண்களில் 2 சொட்டு வீதம் விட்டு வந்தால் கண்களில் பூ விழுதல் குணமாகும்.
17. கற்பூரவல்லி கசாயத்தில் ஏலக்காய் இரண்டு, கிராம்பு ஒன்றை இடித்து சேர்த்து காய்ச்சி தேன் சேர்த்து குடித்து வந்தால் மார்புச் சளி குணமாகும்.
18. சீரகம் ஒரு டீஸ்பூன் வெந்தாணம் அரை பொடியாக்கி மோருடன் சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.
19. முசுமுசுக்கை, தூதுவளை இலை, பூ, சிறுதும்பை, மிளகு சம அளவு எடுத்து சூரணம் செய்து காலை - மாலை தேனுடன் சாப்பிட ஜலதோஷம் தும்மல், இருமல், குணமாகும்.
20. காய்ந்த பப்பாளி விதையை தூள் செய்து
வேளைக்கு இரண்டு டீஸ்பூன் அளவு பாலுடன்
சேர்த்து மூன்று நாள் இரவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள் வெளிவரும்.
21. நாயுருவி இலை அல்லது மண்ணெண்ணெய் தேய்த்தால் தேள்கடி விஷம் மாறும்.
22. எருக்கன் இலை பூ, நாயுருவி இலை மூன்றையும் சேர்த்து அரைத்து கடிவாயில் தடவினால் நாய்க்கடி விஷம் மாறும்.
23. ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்யில் மூன்று முதல் ஐந்து சொட்டு ஊமத்தன் இலைச் சாறு சேர்த்து கொடுத்தால் வெறிநாய் கடி குணமாகும்.
24. வாய் உதடுகளில் வரும் புண்களுக்கு, பொறித்து எடுத்த வெண்காரத்தையும் தேனையும் சேர்த்து தடவி வந்தால் குணமாகும்.
25. குப்பை மேனியை அரைத்து கோலி அளவு எடுத்து தினம் ஒரு வேளை மூன்று நாள் கொடுத்தால் பூனைக் கடி விஷம் தீரும்.
26. பொரித்து பெடித்த வெண்காரமும் தேனும் சேர்த்து போட்டால் உதடு நாக்கு வாய்ப்புண் குணமாகும்.
27. மேகம் அதிகமாக இருந்தால் மாயக்காயை பொடித்து தேனுடன் சாப்பிடவும்.
28. பூரான் கடித்தால் உடன் மண்ணெண்ணெய் தேய்க்கவும் உள்ளுக்கு கருப்புக்கட்டி சாப்பிடவும். குப்பை மேனி, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து மேலுக்கும் பூச வேண்டும்.
29. மூத்திர எரிச்சலுக்கு புளியங்கொட்டை உள்பருப்புடன் கற்கண்டு சேர்த்து காலை மாலை சாப்பிடவும்.
30. எலி கடித்தால் அவுரி அல்லது நீலிவேர் தொலி 24 கிராம், எடுத்து 100 மில்லி பாலில் அரைத்து கலக்கி காலையில் மட்டும் ஆறு நாட்கள் சாப்பிடவும்.
மருத்துவர் : கே.பி.பால்ராஜ்
தொடர்புக்கு : 94 87 34 87 03