செலவில்லா சித்த மருத்துவம்

மரு.ஓ.ட.பால்ராஜ் - 9487348703.
31. பாம்பு தீண்டினால் கடி வாய்க்கு கீழ் ஈரத் துணியில் கட்டுப்போடவும். வாழை மரச்சாறு 1/2 லிட்டர் கொடுக்கவும், சிறியா நங்கை, பெரியா நங்கை, வெள்ளை சங்கு புஷ்ப வேர், ஆடு தின்னா பாளைவேர், வசம்பு இவைகளை சேர்த்து கொடுக்கவும். விஷம் ஏறாமல் இருக்க 30 மில்லி வேப்பெண்ணெய் கொடுக்க வேண்டும்.
32. சகல மூலத்திற்கும் நாயுருவி இலை, கரிவேப்பிலை, கருணைக் கிழங்கு மூன்றையும் சேர்த்து அரைத்து பசு வெண்ணெய் கலந்து இளகம் கிண்டி நெல்லிக்காய் அளவு காலை, இரவு சாப்பிட்டு வர வேண்டும்.
33. சிலந்தி, வண்டு கடித்தால் அவுரியை கசாயம் இட்டு காலை, மாலை மூன்று நாட்கள் குடிக்கவும்.
34. இலவங்க பத்திரி தூளை 1/2 டிஸ்பூன் அளவு எடுத்து 200 மில்லி காய்ச்சிய பாலுடன் சாப்பிட்டு வந்தால் இந்திரியம் ஊறும்.
35. மிளகாய்ச்செடி, இலவங்கப்பட்டை, மல்லி, வாழைச்சாறு இவற்றுடன் சர்க்கரை சேர்த்து கசாயம் இட்டு காலை, மாலை வேளைக்கு ஒரு கிளாஸ் குடித்து வர குடி வெறி மறக் கடிக்கும்.
36. ஆண்மைக்கு கசகசா, வால்மிளகு, வாதுமைப் பருப்பு, எள்ளுப் பிண்ணாக்கு இவற்றை நன்கு அரைத்து நெய், தேன் சேர்த்து தினம் இரவு வேளைக்கு ஒரு டிஸ்பூன் சாப்பிட்டு காய்ச்சிய பால் குடிக்கவும்.
37. முகத்தில் உள்ள கரும்புள்ளிக்கு, சந்தனம் பாசிப்பயிறு, ஜாதிக்காய், நாயுருவி இலை, திருநீற்று பச்சிலை, கஸ்தூரி மஞ்சள் இவற்றை அரைத்து முகத்தில் பூசி 2 மணி கழித்து முகத்தை கழுவி வர முகம் பாலீசாக காணப்படும்.
38. தலையில் முடி கொட்டுவதை தடுக்க நெல்லிக்காய் பவுடர், வெந்தயப் பொடி இவற்றை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று விடும்.
39. கருப்புகட்டி, ஓமம் இரண்டையும் அரைத்து கட்டினால் காலில் உள்ள முள் வெளியே வரும்.

40. காயத்தையும், ஓமத்தையும் அரைத்து ஆறிய வென்னீரில் கலந்து குடித்தால் வயிற்றுப் பொருமல் குணமாகும்.
41. காயம் ஒரு பங்கு கருப்பு கட்டி இரு பங்கு சேர்த்து சாப்பிட விலக்க வலி போகும்.
42. மூட்டு வலிக்கு மஞ்சள், வெந்தயம் இவற்றை அரைத்து இஞ்சிச் சாற்றில் காய்ச்சி தேய்க்க வலிபோகும்.
43. கால் ஆணிக்கு, பூவரசன் பழுப்பு இலையை அரைத்து கட்டிவர கால் ஆணி போகும்.
44. விந்து முந்திப்போவதை சப்போட்டா மரப்பட்டையை பொடி செய்து பாலுடன் சாப்பிடவும்.
உங்களுக்குத் தேவையான மருத்துவ விளக்கங்களை போன் மூலம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். செலவில்லா சித்த மருத்துவ புத்தகத்தை ரூ.150/- மணிஆடர் செய்து பெற்று கொள்ளலாம்.
மரு.ஓ.ட.பால்ராஜ்,
சித்தவைத்திய சாலை, சிந்தாமணி, மேலகரம், 627818, தென்காசி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.