செலவில்லா சித்த மருத்துவம்

மேலகரம் டர், தென்காசி தாலுகா, திருநெல்வேரி மாவட்டம்.

1. இதயவலிக்கு : ஆராக்கீரை பத்து கிராம், வெண்தாமரை பத்து கிராம், ஏலக்காய் 3கிராம், யாவற்றையும் இடித்து கொதிக்கவைத்து காலை, மாலை குடித்து வர இதயவலி குணமாகும்.

2. வாய்வுக்கு : சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருங்காயம், ஓமம், ஏலக்காய், கரிவேப்பிலை, யாவற்றையும் சம அளவு எடுத்து இளம் வருப்பாய் வறுத்து இடித்து சரித்து கொண்டு அதன் அளவுக்கு அச்சு வெல்லம் சேர்த்து நொறுக்கி வேளைக்கு ஒரு டீஸ் பூன் சாப்பிட வாய்வு தீரும்.

3. பீச்சல் எடுக்கும் பேதிக்கு : வசம்பு ஐந்து கிராம், சுக்கு ஐந்து கிராம், ஓமம் ஐந்து கிராம், பொடித்து ஒரு சட்டியில் போட்டு கரிய வறுத்து வரும் போது ஒரு கிளாஸ் தண்ணீரை விட்டு காய்ச்சி இருத்தி மூன்று வேளை குடிக்க தீரும்.

4. சிறுநீர் எரிச்சலாய் இருந்தால் ஆவரம்பூ பத்துகிராம், பனங்கற்கண்டு பத்துகிராம், சேர்த்து இடித்து ஒரு டம்ளர் நீரில் காய்ச்சி குடித்து வர குணமாகும்.

5. இருதய கோளாறு உள்ளவர்கள் : வால்மிளகு பத்து கிராம், சுக்கு ஐந்து கிராம், திப்பிலி ஐந்து கிராம் பனங்கற்கண்டு இருபது கிராம் இவைகளை பொடித்து நூறு மில்லி பால் சேர்த்து காய்ச்சி வாரம் இருமுறை இரு ஸ்பூன் பொடியை போட்டு கலக்கி குடிக்கவும்.

6. ஒவ்வாமை (அலர்ஜி) தூதுவளை, முசுமுசுக்கை, பனங்கற்கண்டு வகைக்கு பத்து கிராம் எடுத்து இடித்து சூரணமாக்கி ஒரு கிளாஸ் நீரைகாய்ச்சி ஒரு ஸ்பூன் பொடியையும் ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்து குடிக்க அலர்ஜி மாறும்.

7. ஈரல் நோய்க்கு :கரிசாலை பத்து கிராம் கீழாநெல்லி பத்து கிராம், மூக்கரட்டை பத்து கிராம், சீரகம் பத்து கிராம், வாய்விளங்கம் பத்து கிராம், இவைகளை இனம் வறுப்பாய் வறுத்து பொடித்து நூறு 100 மில்லி நீரைகாய்ச்சி ஒரு ஸ்பூன் பொடியை போட்டு வாரம் மூன்று நாட்கள் குடித்து வரவும்.

8. பல்வலிக்கு : கடுக்காய் தோல் ஐம்பது கிராம், சீனுக்காரம் நூறு கிராம், கிராம்பு ஐந்து கிராம், வால்மிளகு மூன்று கிராம், உப்பு பத்து கிராம், சீனிகாரத்தை வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும், பின்யாவற்றையும் வறுத்து பொடித்து சேர்த்து பல் துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம் வராது.

9. சிறுநீர் மஞ்சள்கலராய் போதல் : கொத்தமல்ரி பத்து கிராம், வால்மிளகு மூன்று கிராம், ஏலக்காய் கிராம் பனங்கற்கண்டு பத்து கிராம், யாவற்றையும் நன்கு இடித்து இருநூறு மில்லி இளநீரில் போட்டு காய்ச்சி காலை, மாலை, இருவேளை குடிக்க மஞ்சள்கலர் மாறும்.

10. விந்து சீக்கிரம் வெளிவந்தால் :சப்போட்டா மரத்தின் பட்டையை எடுத்து நன்கு இடித்து பொடித்து பாலும் நீரும் 100மில்ரி சேர்த்து காய்ச்சி குடிக்க விந்து முந்துவது நிற்கும்.

சந்தேகங்களை போன்மூலம் கேட்டுதெரிந்து கொள்ளுங்கள், செலவில்லா சித்த மருந்துவ புத்தகம் தேவையானால் ரூ.150/-ம்ர் செய்து தபாரில் பெற்று கொள்ளவும்

இப்படிக்கு

(பால்ராஜ்)