அதிக தண்ணீர் பருகுங்கள்!

அதக தணணர பரகஙகள

 உடல் ரீதியான பல்வேறு பிரச்சனைகள் கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஏற்படவாய்ப்புள்ளது. அதிக வெப்பம் குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்தி உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல் வயதானவர்களுக்கு உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படவாய்ப்புள்ளது.

இவற்றை தவிர்க்க கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறிய டாக்டர்களின் ஆலோசனைகளில் சில : கோடை காலத்தில் சுற்றுப்புற

வெக்கை அதிகமாக இருப்பதால் இதனைத் தவிர்க்க பெரியவர்கள் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மோர், பழச்சாறு போன்றவைகளை பருக வேண்டும். குழந்தைகள் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பிரட், பரோட்டா, ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வகை உணவுகள் நமது உடலில் அதிகளவு தண்ணீர் சத்தை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. உடலில் வெப்பம் அதிகமாகும் போது, இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கும். சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். வாந்தி பேதி, டயரியா வந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் சென்றால், உடலில் நீச்சத்து குறைந்து விட்டது என அறிந்துகொள்ளலாம். இதனை தவிர்க்க போதிய அளவு சுத்தமான தண்ணீர் பருகவேண்டும்.

சார்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது, சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படும். இவர்கள் கையில் எப்பொழுதும் குளுக்கோஸ் கலந்த தண்ணீர் வைத்துக் கொள்வது நல்லது.

பொதுவாக கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கடுமையான வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை வெயிலில் அலையவிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, அம்மை, தோல் கொப்பளம் உட்பட பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள ஆகாரத்தை அதிகளவில் தரவேண்டும். குழந்தைகளை தினமும் இருமுறை குளிக்க வைக்கலாம். பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம். இளநீர், பாழரசங்கள், உப்பு கலந்த எலுமிச்சை பழச் சாறு, தர்பூசணி தரலாம்.