டாக்டர் சுபாஷ்காந்தி, தமிழ்நாடு சுகாதார திட்டம்.

நாம் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை. தற்கால உணவு முறை, ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல், நாகரிகத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சத்தான காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் மற்றும் தானிய வகைகளை, தினசரி உணவில் கலந்து சாப்பிடுவது மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும். இளைய தலைமுறையினர் கீரை, காய்கறிகளை தவிர்த்த உணவுகளையே சாப்பிடுகின்றனர். இயற்கை சத்து மிகுந்த உணவு பொருட்களை சாப்பிடுவதில், ஆர்வம் காட்டுவதில்லை.

இயற்கை உணவுக்கு பதிலாக எண்ணெயில் பொறித்த தின்பண்டங்கள், பீட்சா, பர்கர், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், ரோட்டோரங்களில் விற்கப்படும் "பாஸ்ட் புட்" வகைகள், பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள் போன்றவற்றை சாப்பிடுகின்றனர்.

இது போன்ற உணவு பழக்க வழக்கங்களால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, கண்பார்வை கோளாறு, ஞாபக மறதி போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்

டாக்டர் சுபாஷ்காந்தி, தமிழ்நாடு சுகாதார திட்டம்.