கொய்யா பழம்.

  downloadபழங்களில், மூக்கை துளைக்கும் வாசனை கொண்டதோடு மட்டுமல்லாமல், மிகச்சிறந்த மருத்துவ குணம் உள்ள பழமாகவும் விளங்குகிறது கொய்யா. தமிழகத்தில் மிகுதியாக விளையும் பழம், அனைவரும்

வாங்கி உண்ணக் கூடிய வகையில், மலிவான விலையில் கிடைக்கக் கூடியது. கனிந்த கொய்யா பழத்துடன், மிளகு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் சோர்வு மற்றும் பித்தம் நீங்கும்.

கொய்யாவுடன் சப்போட்டா பழத்தை சேர்த்து, தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலு பெறுவதோடு, ரத்தம் சுத்தமாகும். மதிய உணவுக்கு பின், கொய்யா பழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்று புண் குணமாகும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவழி, அரிப்பு, மூலநோய், சிறுநீரக கோளாறு உட்பட பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.

கொய்யா இலைகளும் மருந்தாக பயன்படுகிறது. கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி நீங்கும். இலைகளை அரைத்து,

தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்று வலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும். கொய்யா விதையை காய வைத்து பொடி செய்து, பூண்டு சாருடன் கலந்து வெறும் வயிற்றில் ஓரிரு நாட்கள் சாப்பிட்டால் போதும். வயிற்றில் பூச்சிகள் தொந்தரவு இருக்காது.

இப்பழத்தில் அமிலத்தன்மை அதிகம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

கொய்யாவை குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே கொடுத்துப் பழகவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் பெரியவர்களானதும் தம் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் வரும்.