முன் மாதிரி மருத்துவர்.

1 

பல அடுக்குமாடி கட்டிடங்களுடன் நவீனமாக ஜொலிக்கும் பல் நோக்கு மருத்துவமனைகளைக் கொண்ட கல்கத்தா நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “நில் குத்தி” என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரில் உள்ள ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் மகத்தான மனிதராக மாறியிருக்கிறார் அந்த மண்ணில் பிறந்த மருத்துவர் அக்பர் ஹுஸைன்.

ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் பெற்ற மருத்துவர் அக்பர் ஹுஸைன் தனது வேலை நேரம் போக மாலை நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து இலவசமாக மருந்துகளையும் வழங்கி வருகிறார்.
ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்து அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்று அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.
2

  இலவச மருத்துவ சேவை செய்வதற்காக மக்களிடமே நிதி திரட்டி தகரக் கொட்டகையில் “நபாதி சேவா சதன்” என்ற பெயரில் ஒரு மருத்துவனையை துவக்கி அலோபதி, ஆயுர்வேதம், யுனானி போன்ற பல்துறை மருத்துவர்களையும் சேர்த்துக் கொண்டு ஓரு ஆண்டிற்கு 30ஆயிரம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சையும் இலவச மருந்துகளையும் வழங்கி வருகிறார்.
இப்போது இந்த மருத்துவமனையை பெரியஅளவில் கட்ட முயற்சி எடுத்துள்ளார். தொழுகையை மிகச்சரியாக கடைப்பிடிக்கும் டாக்டர் அக்பர் ஹீஸைனை “ஏழைகளின் நண்பன்” என்று அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அழைத்து அவரை மனமுவந்து வாழ்த்துகின்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரியில் மக்களின் வரிப்பணத்தில் படித்து பட்டம் பெறும் மருத்துவர்களே கடைவிரித்துத் மருத்துவ வியாபாரம் செய்யும் இந்தக் காலத்தில் ஒரு முஸ்லிம் மருத்துவரின் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மருத்துவர் அக்பர் ஹுஸைன் ஒரு அடையாளம்.
அவர் செய்யும் சேவையில் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரையும் அவரது மார்க்கமான தீனுல் இஸ்லாத்தையும் நேசிக்கின்றனர்.
முஸ்லிம் மருத்துவர்களுக்கு முன் மாதிரி மருத்துவர்.
Dr அக்பர் ஹுஸைன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.