உளவியல் B.A.PSYCHOLOGY

Modern-psychology-small
தகுதி : +2 முடித்தவர்கள்
டிப்ளமா
Diploma in Psychology
Diploma in Clinical & Community Psychology
Diploma in Child Psychology & Family Relation
Diploma in Medical Psychology
Diploma in Education Psychology
பாடத்தின் தன்மை:
ஆங்கில அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட் மூலம் தனித்துவம் வாய்ந்த ஒரு துறையாக உருவாக்கப் பெற்றதுதான் உளவியல். வாழ்க்கையின் அடிப்படையே உளவியல் மூலம்தான் உருவாக்கப்படுகிறது. மனித மனம் செயல்படும் விதம் மிகவும் வினோதமானது. மனித மனமே மிகவும் ஆற்றல் வாய்ந்த சக்தி. அதைச் சரியான முறையில் ஒருமுகப்படுத்திப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் அடைய முடியாத பல வெற்றிகளை அடையலாம். இவ்வளவு சிறந்த படிப்பைப் படிப்பவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது பிறரையும் புரிந்து கொள்ள இயலும். உலகின் மிகப் பெரிய போர்களுக்கு எல்லாம் காரணம் மனிதர்களின் உளவியல் ரீதியான பிரச்சனைகள் தான். இந்தப் படிப்பின் மூலம் மனித வாழ்க்கையில் எழக்கூடிய பிரச்சனைகளுக்கு காரணங்களைக் கண்டுபிடிப்பதோடு அதை எப்படித் தீர்ப்பது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். உளவியலில் ஃப்ராய்டு, கார்ல் மார்க்ஸ், நீட்சே, யூங் போன்றவர்களின் கொள்கைகளைப் படிப்பதோடு, உளவியலைப் பற்றிய அறிவியல் பூர்வமான அணுகுமுறையும் உளவியல் கொண்டு மனநலம் குன்றியோரின் மனங்களை குணப்படுத்தும் கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
கிளினிக்கல் மற்றும் கம்யூனிட்டி சைக்காலஜி:
ஒரு குறிப்பிட்ட “சமூக”த்தினரின் இயல்புகளுக்கும் கொள்கைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் அடிப்படையாக அமைந்த உளவியல் காரணங்கள் பற்றி ஆராய்வதே இந்தப் படிப்பாகும்.
குழந்தை உளவியலும் குடும்ப உறவுகளும்:
ஃப்ராய்டின் கொள்கைப்படி, ஒரு மனிதன் அன்பானவனாகவோ கோபமானவனாகவோ நல்லவனாகவோ கெட்டவனாகவோ பிற்காலத்தில் உருவெடுப்பதற்குக் காரணமான அத்தனை உளவியல் விதைகளும் அவனுடைய ஐந்து வயதிற்குள்ளேயே விதைக்கப்பட்டு விடுகின்றன. இதனால்தான் குழந்தை வளர்ப்பில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஏன் என்றால் அந்த வயதில் அவனுக்கு கல்வியாக அமைவது அவனுடைய குடும்பமும் அவனுடைய சுற்றுப் புறமுமேயாகும். பேசத் தெரியாத வயதிலும் கூட குழந்தை அனைத்து விசயங்களையும் தன்னுடைய குடும்பம் மற்றும் சுற்றுப் புறத்திலிருந்து கிரகித்துக் கொள்கிறது. அந்த வயதிற்குள் அந்தக் குழந்தை மனத்தில் என்ன என்ன விசயங்கள் பதிகின்றனவோ அவையே பிற்காலத்தில் அதனுடைய ஆளுமையாக உருப்பெறுகின்றன. ஒரு குழந்தை பிறக்கும் போது மரபு ரீதியான சில செய்கைகளையும் தோற்றங்களையும் நோய்களையும் வேண்டுமானால் தாய் தந்தையரிடமிருந்து பெறலாம். ஆனால் அவனுடைய குணங்கள் ‘கேரக்டர்’ என்று சொல்லப்படுகின்ற ஆளுமை சுற்றுப் புறத்திலிருந்தே கற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால்தான் இழி குணங்கள் கொண்ட ஒருவனின் குழந்தை கூட மகானாக உருப் பெறுகிறது.
இதனால்தான் குடும்ப உறவுகளைக் கண்ணாடிப் பாத்திரம் போல மிக மென்மையாகக் கையாள வேண்டி இருக்கிறது. அடிக்கடி தன் பெற்றோர் சண்டியிடுவதைப் பார்க்கும் ஒரு குழந்தை கண்டிப்பாக மனரீதியில் பாதிக்கப்பட்டு ஒரு விரக்தியுடையவனாகவோ கோபக்காரனாகவோ தான் வளர்கிறது. ஆக இது போன்ற குழந்தை சூழலைப் பற்றிப் பயில்வதும் உளவியலின் ஒரு கூறு.
மருத்துவ உளவியல்:
நம்மில் பலருக்கும் உடல் ரீதியான நோய்களை விட மனரீதியான நோய்களே அதிகம். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் மனம் அறிந்து, அவர்களின் உடல் நோய் ஏற்படுவதற்குக் காரணமான மன நோயை அறிந்து, அதற்கு உளவியல் சார்ந்த குணப்படுத்தலை மேற்கொள்வதே மருத்துவ உளவியலின் நோக்கம். மேலும் பெரும்பாலான நோயாளிகளுக்குத் தங்கள் உடல் நிலை குறித்து தேவையில்லாத பயம் இருக்கும். அதைப் போக்கி அவர்களை மனரீதியாக ஒரு அறுவை சிகிச்சைக்கோ இதர மருந்து சிகிச்சைக்கோ சம்மதிக்க வைக்க மருத்துவ உளவியல் பயன்படுகிறது. கணவன் மனைவியருக்குள் ஏற்படும் சிறு சண்டைகள், குடும்பத்தில் அமைதியின்மை போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கூற மருத்துவ உளவியல் பயன்படுகிறது.
கல்வி உளவியல்:
தங்களின் மகளையோ மகனையோ பெரும்பான்மையான பெற்றோர்கள் படிப்புச் சந்தையில் உருட்டப்படும் பகடைக் காய்களாகவே பயன்படுத்துகிறார்கள். தங்களுடைய குழந்தைக்கு ஆர்வம் உள்ள துறையில் அதனை ஏற்படுத்துவதை விட, பெரும்பாலான மக்களின் தேர்வாக உள்ள ஒரு சில படிப்புகளை நோக்கியே தங்கள் குழந்தைகளைத் தள்ளுகின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பிலோ பனிரெண்டாம் வகுப்பிலோ கூடுதல் மதிப்பெண் எடுக்காவிட்டால் தங்கள் வாழ்க்கையே போய் விட்டதாக எண்ணத் தொடங்கி விடுகின்றனர். இதைச் சரியான முறையில் கவனிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதே கல்வி உளவியல். இதைத் தவிர, கல்வி கற்பிப்பதிலும் கல்வி உளவியல் பயன்படுகிறது. எந்த முறைகளில் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வி உளவியல் காட்டுகிறது.
வேலை வாய்ப்பு:
மன நல மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், சமூக நலத்துறை, கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றில் தனியாகவும் மருத்துவமனைகள் ஆரம்பிக்க முடியும்.
கற்றுத் தரும் இடங்கள்
அழகப்பா பல்கலக்கழகம் தொலைதூரக் கல்வியாக வழங்கும் B.sc PSYCHOLOGY என்ற உளவியல் பாடத்தோடு இஸ்லாமிய உளவியல் பாடத்தையும் சேர்த்து படிப்பதற்கு அம்மாபட்டிணம் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரியில் B.I.S.Ed PSYCHOLOGY என்ற படிப்பு பிற்றுவிக்கப்படுகிறது. PHONE NO;9943891221/75984616500
1. University of Madras, Chennai
2. Annamalai University, Chidambaram,
3. Government Arts College, Coimbatore
4. Presidency College, Chennai
5. National Institute of Mental Health and Neuro science is a medical institution, Bangalore
6. National Council of Educational Research and Training, New Delhi
7. Tata Institute of Social Sciences, Mumbai,
8. Indian Institute of Science, Bengaluru
9. Bharathiar University, Coimbatore,
10. Mother Teresa Women's University, Kodaikanal,
11. Justice Basheer Ahmed Sayeed College For Women, Chennai
12. Women's Christian College, Chennai
13. Avinashilingam Institute for Home Science and Higher Education for Women, Coimbatore,
14. Indira Gandhi National Open University, New Delhi