தாய்ப்பால்

6302766024 e428037100 b

உலக சுகாதார மையம் (கீபிளி) எண்ணற்ற தினங்களை சிறப்பு தினங்களாக கொண்டாடி வருகிறது அதன் மூலம் மக்களுக்கு குறிப்பிட்ட செயல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக உலக

எய்ட்ஸ் தினம், உலக புற்று நோய் தினம், உலக காச நோய் தினம்.
இது போல மக்களுக்கு குறிப்பாக தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய தாய்ப்பாலின் மகிமையை உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு நாள் போதாது என்பதால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 175 நாடுகளில் ஒரு வார காலம் சர்வதேச “தாய்ப்பால் வாரம்” கொண்டாடப்படுகிறது.
தாய்ப்பால் கொடுப்பது ஒவ்வொரு சமூகத்திலும் பாரம்பரியமாகவே நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை சமூக, பண்பாடு, கலாச்சார, பொருளாதார, கல்விப் பின்புலங்கள்தான் தீர்மானிக்கின்றன என்பதை பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியா பாரம்பரியமாகவே தாய்ப்பாலுக்கு சிறப்பான இடமளிக்கும் நாடாக இருக்கிறது.
அந்த வகையில் இஸ்லாம் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை உலகப் பொதுமறை அல் குர்ஆன் மற்றும் முஹம்மது நபி (ஸல்)
அவர்களின் வழிகாட்டுதல் மூலம் ஏற்படுத்தியது. விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதை விட குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை “கடமை” என்ற தொனியில் வலியு றுத்தியது என்பதுதான் உண்மை. குர்ஆனில் “தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்; என்று உலகப் பொதுமறை அல்குர்ஆன் (2 : 233) மனிதர்களுக்கு அறிவுறுத்தியது.
மனிதர்களுடைய இயல்பை அறிந்த அல்லாஹ் தாய்ப்பால் கொடுக்க இயலாத நிலையில் ஒரு தாய் இருந்தால் செவிலித்தாய்கள் வழியாக தாய்ப்பால் ஊட்டும்படி கட்டளையிடுகிறான். இஸ்லாம் அதற்கான அழகிய வழிகாட்டு தலையும் வழங்குகிறது. முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அவரது தாயாலும் பின்பு செவிலித் தாய்களாலும் இரண்டு ஆண்டுகள் பரிபூரணமாக பாலூட்டப்பட்டது என்பது நாமறிந்த வரலாறு.
பாலூட்டும் செவிலித் தாய்மார்களை பெற்றெடுத்த தாயின் அந்தஸ்த்தைப் பெற்றவர்கள் என்றும் கௌரவிக்கிறது. இந்த நடைமுறை “தாய்ப்பாலூட்டுவதன்” சிறப்பை, மகத்துவத்தை நமக்கு உணர்த்தப் போதுமானது.
தாய்ப்பால் குழந்தைகளுக்காக அல்லாஹ் இயற்கையாகவே வழங்குகிற உணவு மட்டுமல்ல அந்தக் குழந்தை வளர்ந்து வாலிபமாகி முதுமையடைந்து மரணிக்கும் வரையிலான அவனது உடலுக்குத் தேவையான மருந்து என்று சொன்னால் அது மிகையாகாது. இதில் அமைந்திருக்கும் பலன்களை அறிந்தால் அதன் முக்கியத்துவம் நமக்குப் புரிய வரும் என நம்புகிறேன்.
தாய்ப்பால் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக் களையும் அளிக்கிறது. ஊட்டச்சத்து மிக்க உணவான தாய்ப்பால் தாயின் உடல் சேமிப்புக்களிலிருந்து இரத்த ஓட்டம் மூலம் பெறப்படுகிறது. தாய்ப்பாலில் உள்ள கொழுப்பு, புரதம், நீர் என ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தும் சம அளவில் கலந்திருக்கிறது. குழந்தை பிறந்த சில நாட்களுக்கு சுரக்கும் சீம்பால் (சிஷீறீஷீstக்ஷீuனீ) கருவரையிலிருந்து வெளியாகி வரும் குழந்தைக்கு உலகின் சூழலை எதிர் கொள்ளும் வலிமையைத் தருகிறது என்பதை பெரும்பாலானோர் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இதில் அதிகளவு லக்ட்டோஸ் (லிணீநீtஷீsமீ) இருக்கிறது. இதுதான் குழந்தைக்கு ஊக்கத்தை தரும் கார்போ ஹைட்ரேட் ஆகும். மேலும் இது எளிதில் ஜீரணமாகக்கூடிய புரதங்களையும், சக்தியளிக்கக்கூடிய கொழுப்பையும் கொண்டுள்ளது. தாய்ப்பாலில் மட்டுமே குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியான இமினோகுளோபிளின் (மினீனீuஸீஷீரீறீஷீதீuறீவீஸீ மிரீணீ, வீரீனீ, மிரீரீ ) நிறைந்துள்ளது. இது குழந்தையை சுவாச நோய் மற்றும் வயிற்றுப் போக்கை விட்டும் காப்பாற்றுகிறது. மேலும் பலவகையான நோய் தொற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் மிகப் பெரும் நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது. இது தாய்ப்பாலின் தனித்துவமாகும். ஆண்டு தோறும் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் வயிற்றுப் போக்கினால் பாதிப்படைகின்றனர். பெரும்பாலும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு (மிஸீயீணீஸீt விஷீக்ஷீtணீறீவீtஹ்) முதன்மைக் காரணமாக இருப்பது வயிற்றுப் போக்கு (ஞிவீணீக்ஷீக்ஷீலீமீணீ) மற்றும் “ஊட்டச் சத்துக் குறைபாடு (விணீறீஸீutக்ஷீவீtவீஷீஸீ)” ஆகிய இரண்டுமாகும். ஒரு குழந்தை தாய்ப்பாலை முழுமையாக பெற்றிருந்தால் இது போன்ற நோய்களிலிருந்து விடுபடலாம். மேலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறையும்.
தாய்ப்பால் கொடுப்பதால் லுக்கேமியா (றீமீuளீமீனீவீணீ) எனும் இரத்த சம்பந்தமான கான்சர் சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவது தடுக்கப்படுவது ஒரு ஆய்வின் மூலம் கண்டரியப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக கைக்குழந்தைகளில் ஏற்படும் திடீர் இறப்பு (ஷிuபீபீமீஸீ மிஸீயீணீஸீt ஞிமீணீtலீ ஷிஹ்ஸீபீக்ஷீஷீனீமீ - ஷிமிஞிஷி) தாய்ப்பாலூட்டப்படுவதன் மூலம் பாதியாகயாக குறைந்திருப்பதாக மியூன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் செய்யப் பட்ட ஆய்வு கூறுகிறது. நோய் எதிப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்து ஆகிய இரண்டுமே குழந்தையின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கிறது.6243 malnutrition france algosophette
மேலும் முழுமையான தாய்ப்பால் வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் 1.5 மில்லியன் குழந்தை மரணங்களைத் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கிறது யுனிசெப் (ஹிழிமிசிணிதி) நிறுவனம்.
இது மட்டுமல்லாமல் தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பை (ஙிஷீஸீபீவீஸீரீ) அதிகப்படுத்துகிறது. மேலும் குழந்தையின் அறிவுத்திறனை (வீஸீtமீறீறீமீநீtuணீறீ பீமீஸ்மீறீஷீஜீனீமீஸீt) மேம்படுத்துகிறது.
ணிஜ்நீறீusவீஸ்மீ தீக்ஷீமீணீstயீமீமீபீவீஸீரீ முழுமையான தாய்ப் பலூட்டல் என்பது குழந்தை பிறந்ததிலிருந்து ஆறுமாத காலம் வரை “தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.” தண்ணீர் கூட கொடுக்கக்
கூடாது. வைட்டமின் சொட்டு மருந்து போன்றவைகளைக் கொடுக்க அனுமதியுண்டு.
தாய்ப்பால் மட்டுமே ஆறு மாத காலத்திற்கு கொடுக்க வேண்டும். ஆறுமாத காலத்திற் குப்பின் தாய்ப்பாலோடு இணை உணவையும் (ஷ்மீணீஸீவீஸீரீ) சேர்த்துக் கொடுக்கலாம்.
தாய்ப்பால் எவ்வளவு காலம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அதற்கும் மனிதர்களைப் படைத்த இறைவன் “பரிபூரணமான இரண்டு
ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்”
என்று குர்ஆனின் மூலம் நமக்கு வழிகாட்டு கிறான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது இன்றைய மருத்துவத் துறை ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும்.
தாய்ப்பாலுக்கு மாற்றா....?
தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் ஏனைய குழந்தைகளை விட குறைந்தளவிலேயே தொற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். 1995 இல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளை விட செயற்கை உணவு அளிக்கப்படும் குழந்தைக ளிடையே தொற்று நோய், வயிற்றுப்போக்கு வருவதற்கான சந்தர்ப்பம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தலைமுறை தலைமுறையாக தாய்ப்பால் ஊட்டும் வழக்கம் தொன்று தொட்டு அனைத்து மக்களிடமும் இருந்து வந்த சூழலில், தொழில் புரட்சியும் (அ)நாகரீ வளர்ச்சியும் மனிதர்களுடைய போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியது போல, தாய்ப் பாலூட்டும் விசயத்தில் பெண்களுடைய போக்கிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
புதிய கண்டுபிடிப்புகள் வழியாக பணம் சம்பாதிக்கும் வெறி கொண்ட நிறுவனங்கள் கம்பெனிகள் மேலைநாடுகளில் தாய்ப்பாலுக்கு நிகரானது என்பது போல சில ஊட்டச்சத்து மாவு (யீஷீக்ஷீனீuறீணீ யீமீமீபீவீஸீரீ) போன்றவற்றை அறிமுகப்படுத்தி தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை விட்டும் தடுத்து இளம் தலை முறைகளை ஊனமாக்கும் பயங்கரத்தை ஆரம்பித்தன. அதை தாய்ப்பாலுக்கு நிகரான
உணவு (ஙிக்ஷீமீணீst னீவீறீளீ suதீstவீtutமீ) என்று விளம்பரப்படுத்தி தாய்ப்பாலின் மகிமையை ஒழித்தார்கள். தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் அழகு சிதைந்து போகும் என்ற தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி தாயின் மனநிலையை மாற்றினார்கள். இன்றும் அதன் மோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய சமுதாய மக்களும் தாய்ப்பாலுக்கு மேலாக இந்த பால் பவுடர்களைக் கருதி விளம்பரத்திற்கு அடிபணிந்து குழந்தையின் வளர்ச்சியையும் அறிவுத் திறனையும் சிதைக்
கின்றார்கள். முக்கியமாக எங்கும் எதிலும் லாபம் ஒன்றே குறியெனத் திரியும் பன்னாட்டு,
உள்நாட்டுக்கம்பெனிகள் பெரும் வளர்ச்சி
கண்டுள்ளது. அதன் பிரதிபலன் குழந்தை களின் வளமான எதிர்காலத்தை சிதைந்து, பிறக்கும் தலைமுறை ஊட்டச்சத்துக் குறைபாடுக
ளுடன் பிறப்பது அதிகமாகி இருக்கிறது.
ஸ்வீடன் நாட்டு நிறுவனம் ழிமீstறீங செயற்கை
பால் பவுடர் தயாரித்து அதை சந்தைப்படுத் தியது. அமெரிக்கா உட்பட 120 நாடுகள் செயற்கை பால் பவுடருக்கு எதிராக தங்கள்து எதிப்பை பதிவு செய்தன. அமெரிக்காவில் 1977 ஆம் ஆண்டு “ழிமீstறீங தீஷீஹ்நீஷீtt நீஷீனீனீவீttமீமீ” என்ற பால் பவுடரை எதிர்க்கும் அமைப்பு ஒன்றை நிறுவி அதன் மூலம் தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தியும். மற்ற செயற்கை பால் பவுடரை எதிர்த்தும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் இன்று மக்கள் விளம்பரம் மோகத்திற்கு அடிமையாகி தாய்ப்பாலை ஒரு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் வயிற்றுப் போக்கால் பிறந்த குழந்தைகளில் ஏற்படும் இறப்பு பொதுவாக செயற்கையான உணவை ஊட்டுவதனாலேயே நிகழ்கிறது என்று கூறும் மருத்துவர்கள் தாய்ப்பாலூட்டல் மிக மிக அவசியம் என்பதை ஒத்துக் கொள்கின்றனர்.
இந்த ஆண்டு ழிமீstறீங நிறுவனம் செயற்கை பால் பவுடர் தயாரிப்பில் அதிக இலாபம் ஈட்டும் முன்னணி நிறுவனமாக உள்ளது. எல்லாம் கை மீறிப் போன பிறகு இப்போது மக்களால் “தாய்ப்பாலின்” மகத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக உணரப்பட்டு வருகிறது.
உலக தாய்ப்பால் வாரத்தின் (கீஷீக்ஷீறீபீ ஙிக்ஷீமீணீst திமீமீபீவீஸீரீ கீமீமீளீ 2015) மையக் கருத்து என்னவென்றால் “வேலையுடன் தாய்ப்பாலை கொடுக்க வேண்டும்” என்பதுதான் இன்று பெரும்பாலான தாய்மார்கள் வேலைக்குச் செல்வதால் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அரசு தனியார் அலுவலகங்களில் (றிஷீst ஸீணீtணீறீ றீமீணீஸ்மீ) பிரசவத்திற்குப் பின்பு 4 மாத காலம் விடுமுறை விடப்படுகிறது. இதன் மூலம் குழந்தை தாயிடமிருந்து நான்கு மாத காலம் முழுமையாக தாய்ப்பாலைப் பெறலாம்.
ஆனால் இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாக மற்ற இணை உணவோடு சேர்த்து தாய்ப்பாலும் கொடுக்க வேண்டும். அலுவலகம் செல்லும் கட்டாயம் இருப்பவர்கள் காலையில் தாய்ப்பாலை எடுத்து பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அறை (ஸிஷீஷீனீ tமீனீஜீமீக்ஷீணீtuக்ஷீமீ) வெப்ப நிலையில் 6 8 மணி நேரம் வரை பாதுகாப்பாக இருக்கும். இதை வீட்டில் உள்ளவர்கள் குழந்தைக்கு புகட்டலாம். இதன் மூலம் குழந்தை இரண்டு வருடம் வரை தாய்ப்பால் பெற வாய்ப்பிருக்கிறது.
குர்ஆனும் நபியவர்களின் வாழ்க்கை முறையும் நமக்கு மிகவும் வலியுற்றுத்திக் கூறுகிறது. உலகத்தில் வேறு யாரும் எந்த கொள்கையும் இந்த அளவு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லவில்லை. இஸ்லாம் இதை மிகவும் வலியுறுத்துகிறது. momandbaby2
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல தாய்க்கும் பெரும் நன்மை புரிகிறது பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்று நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பது பிரசவத்திற்குப்பின் கர்ப்பப்பை அதன் இயல்பு நிலைக்கு வருவதற்கு உதவுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை குழந்தைப் பேறு ஏற்படுவது தற்காலிகமாக இயற்கையாகவே நிறுத்தி வைக்கப்படுவது போன்ற நல்ல பலன்கள் தாயின் உடலுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தாய்ப்பால் கொடுக்கப்படுவதன் மூலம் சமுதாயம் நல்ல ஆரோக்கியமுள்ள அறிவுள்ள எதிர்காலத் தலைமுறையை தலைவர்களை பெற முடியும். ஏனெனில் “இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்.”
தாய்ப்பால் கொடுப்போம்...
வளமான சமூகத்தை உருவாக்குவோம்...

OM.அப்துஷ் ஷீக்கூர் Msc.,Pediartri Nursing, MA.,Child car and Education.,M.B.A.,Phd