செலவில்லா சித்த மருத்துவம்

5877-effective-siddha-medicines-for-hair-growth
அன்பான வாசகர்களே! கடந்த மாதம் குழந்தைகளுக்கு வரும் நோய்கள் பற்றி எழுதி இருந்தேன். இந்த மாதம் அதன் தொடர்ச்சியை எழுதுகிறேன். இந்த இலகுவான மருந்துகளை செய்முறையில் உபயோகித்து பலனடைய வேண்டுகிறேன்.
19. சிறுவர்களுக்கு உண்டான கரப்பான்களுக்கு
குப்பைமேனி இலை, சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து மைபோல் அரைத்து தேய்த்து சீயக்காய் போட்டு நீராட்டி வர குணமாகும்.
20. குழந்தைகளின் செறியா மாந்தத்திற்கு
வேலிப் பருத்தி இலையை வதக்கிப் பிழிந்து சாறு எடுத்து ஒரு சங்கிற்கு ஒரு துளி நெய் சேர்த்து காலை மாலை கொடுக்க குணமாகும்.
21. குழந்தைகள் சாம்பல் மண் தின்பதற்கு
கீழ்வாய் நெல்லி வேர், ஐந்து கிராம் கடுக்காய்த் தோல், மிளகு பத்து கிராம் மூன்றையும் புளித்த மோரில் அரைத்து கலக்கி குழந்தைகளுக்கு காலை மாலை ஒரு சங்களவு மூன்று நாட்கள் கொடுக்க தீரும்.
22. குழந்தைகள் ஜலமாக மலம் கழித்தால்
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் அமுக்காரா வேரும், இந்துப்பூவும் சமமாக எடுத்து பொடியாக்கி வேளைக்கு மூன்று கிராம் அளவு ஒரு டம்ளர் பாலுடன் கொடுக்க குணமாகும்.
23. குழந்தைகள் பெலன் பெற
அமுக்காரா கிழங்கை வண்டுகட்டி பாலில் அவித்து காய வைத்து பொடித்து வேளைக்கு மூன்று கிராம் அளவு ஒரு டம்ளர் காய்ச்சி பாலுடன் கொடுத்து வர குழந்தைகள் பலன் பெறுவார்கள்.
24. குழந்தைகள் நன்கு கொழு கொழுவென்று இருக்க
துருவிய தேங்காய், பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, காரட், தக்காளி, கொண்டைக் கடலை எல்லாவற்றையும் சமமாக சேர்த்து வேக வைத்து தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும்.
25. குழந்தைகளின் டர்னசிலுக்கு (தொண்டை நோய்)
திருநீற்று பச்சிலை, மிளகு, வெள்ளைப் பூண்டு இவைகளை சமபாகம் எடுத்து நன்கு அரைத்து தேனில் கலந்து பஞ்சில் தொட்டு உள்நாக்கில் தடவி வர டான்சிஸ் குணமாகும்.
26. பச்சிளம் குழந்தைகள் சீரி சீரி அழுதால்...
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் சிறிதேக்கு, அரிசித் திப்பிலி இரண்டையும் எடுத்து பொடி செய்து தேனில் கலந்து தாயின் மார்பகங்களில் தடவி பால் கொடுத்து வர குணமாகும்.
27. குழந்தைகளின் பேய் சொரிக்கு
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் இந்துப்பை பொடித்து நெய்யுடன் கலந்து வெயிலில் வைத்து உடம்பில் பூசி மறுநாள் வென்னீரில் குளிக்க குணமாகும்.
28. குழந்தைகளுக்கு வயிறு கழிச்சல் இருந்தால்...
வயல் வரப்பில் கிடைக்கும் பொடுதலையை வதக்கி ஓமத்தை வறுத்து இரண்டையும் நீர் விட்டுக் காய்ச்சி இறுத்து ஒரு சங்களவு கொடுக்க கழிச்சல் நின்று விடும்.
29. குழந்தைகளின் சளிக்கு
இரண்டு கிராம்பு, இரண்டு வெற்றிலை இரண்டையும் சதைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு வேக வைத்து கசாயம் ஆக்கி அரை டம்ளர் வந்ததும் வேளைக்கு சங்களவு கொடுத்து வர சளி தீரும்.
30. குழந்தைகளின் செறியா மாந்தத்திற்கு, பொருமலுக்கு
வேலிப் பருத்தி இலையை வதக்கி சாறு பிழிந்து ஓமம், வசம்பு இவைகளை பொடியாக்கி வெதுப்பி மேல் கண்ட சாற்றுடன் கொடுத்து வர செறியா மாந்தம் குணமாகும்.
31. குழந்தைகளுக்கு உரம் (வர்மம்) விழுந்தால்
வெள்ளைப் பூண்டு ஐம்பது கிராம், கடுகு ஐம்பது கிராம் இரண்டையும் அரைத்து வானலியில் சாய்வாக வைத்து மேல் பகுதியில் ஒட்டி வைத்து தீ எரித்தால் தைலம் கீழ் இறங்கும். இந்த தைலத்தை தேய்த்து வர குணமாகும்.
32. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு
கற்பூரவல்லி (ஓமவல்லி) இலைச் சாறு எடுத்து அதே அளவு தேன் அல்லது கற்கண்டு சேர்த்து காய்ச்சி சங்களவு கொடுத்து வர சளி இருமல் குணமாகும்.
குறிப்பு : அன்பான வாசகர்களே! என்னுடைய 60 வருட மருத்துவ சேவையில் நான் கையாண்ட மருத்துவக் குறிப்புகளை 128 பக்க அளவில் புத்தகமாக எழுதி உள்ளேன். இந்த புத்தகத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும், விஷக் காய்ச்சல், ஆண்மைக் குறைவு பற்றியும் அதற்கான மருத்துவ குறிப்புகளையும் விவரமாக எழுதி உள்ளேன். இந்தப் புத்தகம் உங்கள் வீட்டில் ஒரு மருத்துவர் இருப்பது போலிருக்கும். அன்பான வாசகர்கள் இந்த புத்தகத்தை வாங்கி பயனடைய வேண்டுகிறேன்.
ரூ 120/ - வி.ளி. செய்து கொரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மருத்துவர் : ரி.றி.பால்ராஜ்ஸிஜிஷிவிறி. ஷி.க்ஷி. கரை, 9487348703