செலவில்லா சித்த மருத்துவம்

sidda
பெருமை மிகுந்த வாசக பெருமக்களுக்கு…
கடந்த 3 மாதமாக குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் பற்றியும், அதற்கான சித்த மருத்துவ சிகிச்சை பற்றியும் தெளிவாக எழுதி இருந்தேன். இந்த மாதம் மக்களுக்கு ஏற்படும் கல்லடைப்பு, சதை அடைப்பு போன்ற சிறு நீர் கோளாறுகளையும், அதற்கான மருத்துவ முறைகளை பற்றியும் எழுதியுள்ளேன். சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளவும்.
1. நீர் கடுப்பு நீர் சுருக்கு மாற
கீழ்வாய் நெல்லி, சீரகம் இரண்டையும் சமபாகம் எடுத்து வறுத்து இடித்து பொடியாக்கி வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு பசும்பாலுடன் சாப்பிட குணமாகும்.
2.சிறுநீரகத்தில் கல் அடைப்புக்கு
காட்டுப் பசளை கிளங்கில், பசும்பால் விட்டு அரைத்து அரை டீஸ்பூன் சுக்குப் பொடியையும் சேர்த்து சாப்பிட கல் அடைப்பு தீரும்.
3.சிறுநீர் அதிகமாகப் போனால்
காய்ந்த திராட்சை பழம் ஒரு பங்கும், வறுத்த மிளகு அரை பங்கும் எடுத்து நன்கு அரைத்து காலை – மாலை கோலி அளவு சாப்பிட நீர் கட்டும்.
4. நீர்த் தாரையில் கல் அடைப்பு
கோவை தண்டை இடித்து பிழிந்து சாறு கால் படி பொரித்த சீனி காரம், சுண்ணாம்பு வகைக்கு மூன்று கிராம் பொடித்துப் போட்டு காலை – மாலை சாப்பிட்டு வர மூன்று தினத்தில் கல் வெளியேறி விடும்.
5. கல் அடைப்பு, சதை அடைப்பு, நீர் சமூலம்
சிறு பீளை சமூலம். நெருஞ்சில் சமூலம், மாவிலங்கு வேர், பிண்ணாக்கு கீரை சமூலம் இவைகளை சம எடையாக எடுத்து சதைத்து நீர் விட்டுக் காய்ச்சி 1/8 ஆக குடித்து வர மேல் உள்ள கோளாறு தீரும்.
6. நீர் மாத்திரம் அடைத்தால்
விளக்கென்னெய் கால் படியில் ஒரு பலம் சிறு உள்ளியை சிதைத்துப் போட்டு காய்ச்சி, பொரித்த வெண்காரம் அல்லது பொடிகாரம், கடுகுத் தூள் வகைக்கு அரை டீஸ்பூன் சேர்த்து குடிக்க நீர் பிரியும்.
7. உடல் சூடு நீர் கடுப்புக்கு
நல்ல இளநீரை கண் திறந்து அதில் பாசி பயரு 2 டீஸ்பூன் போட்டு இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் காலையில் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து குடிக்க கடுப்பு தீரும்.
8. நீர் விட்டு விட்டு வந்தால்
வெண்ணெய், வால் மிளகு, கற்கண்டு இவைகளை சம அளவு எடுத்து நன்கு அரைத்து சுத்தம் செய்து நான்கு தடவை கழுவிய சோற்று கற்றாளையும் சேர்த்து சாப்பிட நீர் வரும்.
9. நீர் எரிச்சல் தீர
செம்பருத்தி இலைகளை நன்கு அரைத்து பாலுடன் சாப்பிட நீர் எரிச்சல் தீரும்.
10. நீர் கடுப்பு அதிகமாக இருந்தால்
வால் மிளகு எண்ணெய் 150 கிராம், பரங்கி சக்கைத் தூள் 150 கிராம், வெள்ளை குங்கிலியம் 150 கிராம் இவைகளை ஒன்ரு சேர்த்து நீர் முள்ளி சாறு விட்டு அரைத்து சுண்டக்காய் அளவு மாத்திரை செய்து தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
11. வெள்ளைப் படுதல், நீர் தாரை எரிச்சல் (பெண்களுக்கு) கலியான பூசணிக்காய் (தடியக்காய்), இதை குடைந்து விதை எல்லாம் நீக்கி அதனுள் செம்பருத்தி பூக்களை ஊர வைத்து ரசம் எடுத்து அத்துடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட தீரும்.
12. அடைபட்ட நீர் இறங்க (வேறு முறை)
கல்பாசியை நன்கு அரைத்து அடிவயிற்றிலும், முள்ளந்தண்டிலும் பூச நீர் இறங்கும்.
13. உடல் சூடு, கல், நீர் அடைப்புக்கு
நத்தை சூரி விதையை வறுத்து, பொடித்து நீர் விட்டுக் காய்ச்சி பால் சேர்த்து குடிக்க கல் வெளியேறும்.
14. வெளுமூத்திர அடைப்பு
பனிரெண்டு அவுன்ஸ் வெடி உப்பை இரண்டு பாட்டில் தண்ணீரில் போட்டு கலக்கி சிறிது சிறிதாக குடித்துக் கொண்டே இருக்க நீர் இறங்கும். வாந்தியானாலும் கொடுத்துக் கொண்டே இருக்கவும்.
15. கிட்னி கோளாறுக்கு
சுரக்காய், வெந்தயம், சீனம், அருகம்புல் மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து கோதி அளவு பாலுடன் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர கிட்னி நன்கு இயங்கும்.
16. சிறு நீரகக் கல் வெளியேற
நொச்சி இலை 15 கிராம், 150 மில்லி நீருடன் சேர்த்து காய்ச்சி கொதிக்க வைத்து ஆறிய பின் தினமும் அதிகாலையில் குடிக்க கல் வெளியேறும்.