செலவில்லா சித்த மருத்துவம்

Depositphotos 2069080 m
அன்பர்களுக்கு கடந்த மாதம் மூத்திரம் சம்பந்தமான கல்லடைப்பைப் பற்றி எழுதி இருந்தேன். மூத்திரக் கோளாறுகளுக்கு மிக முக்கியக் காரணம், நல்ல உணவுகளை உட்கொள்ளாதது.
மூத்திரத்தை அடக்குவது, சுத்தமான தண்ணீர் குடிக்காதது, இந்திரிய ஒழுக்கில் தங்கி இருப்பது, மித மிஞ்சிய தாம்பந்திய உறவுகள், சாராயம் போன்றவற்றை குடிப்பது, போதிய நீர் அருந்தாமை முக்கிய காரணங்களாகும். மூத்திரக் கோளாறுகள் பலருக்கு பல விதமாக இருக்கும்.
ஆகவேதான் இங்கு பல விதமான மூலிகைகளைக் கூறி வருகிறேன். இதை அறிந்து அவரவர்கள் கோளாறுக்குத் தகுந்த மாதிரியான மருந்துகளை செய்து பயனடைய வேண்டுகிறேன். கடந்த மாதத்தின் தொடர்ச்சியாக வருவது.
17. சிறுநீரக வலி, வீக்கம் தீர :
தேன் மெழுகை பட்டாணி அளவு வென்நீருடன் உண்ணவும். முட்டை மஞ்சள் கரு, மிளகுப்பொடி, மஞ்சள் பொடி இவைகளை ஒன்று சேர்த்து வீக்கம் உள்ள இடத்தில் பூசி வர வீக்கம் போகும்.
18. கல் மற்றும் ஜதை அடைப்புக்கு :
காத்தோட்டி இலை, பப்பட புல், கருங்காணம் இவைகளை சமமாக எடுத்து சேர்த்து இடித்து சூரணமாக்கி வேளைக்கு 1 டீஸ்பூன் அளவு காலை, மதியம், இரவு தினம் மூன்று வேளை சாப்பிட குணமாகும்.
19. உடல் உஷ்ணம், நீர் கடுப்பிற்கு :
பாதாம் பிசினை நாட்டு மருந்து, கடையில் வாங்கி 3 கிராம் அளவு எடுத்து பொடித்து 1 டம்ளர் நீரில் மாலையில் போட்டு வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க உடல் சூடு தணியும். 3 நாட்கள் குடிக்கவும்.
20. நீர்க் கடுப்புக்கு :
நீர்முள்ளி விதையை நெய்விட்டு வறுத்து இடித்து, 200 மில்லி தேங்காய் பாலுடன் 1 டீஸ்பூன் பொடியை போட்டு குடிக்க வேண்டும்.
21. சிறு நீரக கல் கரைய வேறு முறை :
வெள்ளரி விதை 5 கிராம், நெருஞ்சில் முள் 5 கிராம், கொள்ளு (காணம்) 5 கிராம்,
இவைகளை இடித்து 500 மில்லி நீரில் போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தினம் காலை, மாலை வெறும் வயிற்றில் குடித்து வர கல் கரையும்.
22.சூட்டுடன் கூடிய நீர் அடைப்பு கல் அடைப்புக்கு :
குப்பைமேனி இலை 2 பிடி கருஞ்சீரகம் 100 கி சர்க்கரை 500 கிராம் இம்மூன்றையும் இடித்து சலித்து தினசரி ½ ஸ்பூன் அளவு பசு நெய், வெண்ணெய்யுடன் சாப்பிட குணமாகும்.
23. உடல் சூடு காங்கை குறைய :
1 கிலோ தாமரை பூவை நிழலில் உலர்த்தி 3 லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊர வைத்து, மறுநாள் 1 லிட்டர் வரும் வரை காய்ச்சி வடிகட்டி 1 கிலோ சர்க்கரை சேர்த்து தேன் பதம் வரும்வரை காய்ச்சி 15 மில்லி அளவு ஒரு கிளாசில் ஊற்றி தண்ணீர் சேர்த்து குடிக்க உடல் சூடு, காங்கை குறையும்.
24. வெயில் காலத்தில் வரும் உஷ்ண கடுப்புக்கு :
யானை நெருஞ்சில் இலை 20 ஐ பறித்து, ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் கழித்து இலைகளை எடுத்து எரிந்து விட்டு குழகுழப்பாக இருக்கும் தண்ணீரை குடிக்க சூடு தணியும்.
25. உடல் சூடு தணிய வேறு ஒன்று :
நன்னாரி வேரை சதைத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊர வைத்து, பின் அதை வடித்து பாலும் தேனும் சேர்த்து குடிக்க சூடு தணியும்.
26.தேக காங்கைக்கு :
சிறு வெங்காயத்தை குறுக அரிந்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர தேக காங்கை தணியும்.
27. நீர் கடுப்புக்கு உடல் சூட்டுக்கு தைலம் :
சிற்றாமணக்கு எண்ணெய் 400 மில்லி கற்றாழை சோறு 100 கிராம், ஊர வைத்து எடுத்த வெந்தயம் 10 கிராம், சிறுக அறிந்த வெள்ளை வெங்காயம் 1 இவைகளை அரைத்து எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி வடித்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு குடித்து வர நீர்க்கடுப்பு உடல் சூடு தணியும்.
28. நீர் சுருக்கு, வெட்டைக்கு (விந்து வெளி வருதல் )
சிறு பீளை அல்லது கண்ணுபிளை செடியை நீர் சேர்க்காமல் அரைத்து உப்பில்லா மோருடன் சேர்த்து காலை - மாலை 1 கிளாஸ் சாப்பிட குணமாகும்.
29. நீர் சுருக்கு, நீர் கடுப்புக்கு வேறுமுறை :
நெருஞ்சில் செடியை சமூலமாக பிடிங்கி கழுவி துண்டு துண்டாக வெட்டி சட்டியில் இட்டு வறுத்து 1 படி தண்ணீர் இட்டு காய்ச்சி 1/8 படியாக வற்ற வைத்து 7 தினங்கள் காலையில் சாப்பிட்டு வர மேல்கண்ட நோய் தீரும்.
குறிப்பு : அன்பான வாசகர்களே ! என்னுடைய 60 ஆண்டு
மருத்துவ சேவையில் நான் கையாண்ட மருத்துவ குறிப்புகளை 128 பக்க அளவில் புத்தமாக எழுதி உள்ளேன். இந்த புத்தகத்தில் மனித வர்க்கத்திற்கு ஏற்படும் நோய்களை பற்றியும், விஷ காய்ச்சல், ஆண்மை குறைவு பற்றியும் அதற்கான மருத்துவ குறிப்புகளை விவரமாக எழுதி உள்ளேன். இந்த புத்தகம் உங்கள் வீட்டில், ஒரு மருத்துவர் இருப்பது போலிருக்கும் அன்பார்கள் வீட்டுக்கு ஒரு புத்தகத்தை வாங்கி பயனடைய வேண்டுகிறேன். ரூ 120/ - M.O. செய்து கொரியர் மூலம் பெற்று கொள்ளலாம்.
வாசக அன்பார்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு விரிவான செலவில்லா சித்த மருத்துவ புக்கை பெற்று கொள்ளலாம்.