செலவில்லா சித்த மருத்துவம்

sidda
எனது அன்பான வாசக நண்பர்களே! கடந்த மாத தொடர்ச்சியாக சொரி, சிறங்கு மற்றும் தோல் வியாதிகளை பற்றி இந்த மாதமும் எழுதுகிறேன். இந்த எளிமையான மருந்தை உபயோகப்படுத்தி பலனடைய வேண்டுகிறேன். மூலிகைகள் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். ஊர் வயதான பெரியவர்களிடமும் மூலிகைகளைக் கேட்டுத் தெரிந்து
கொள்ளுங்கள்.
39. தோல் நோய் வராமல் இருக்க :
கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்பம் விதை, கடுக்காய் தோல், நெல்லிக்காய் பருப்பு, வசம்பு இவைகளை சமஅளவு எடுத்து இடித்து சூரணமாக்கி தினமும் பசும்பாலுடன் சேர்த்து தேய்த்து
குளித்து வர தோல் நோய்கள் வராது.
40. தோலை பாதுகாக்க :
வெட்டிவேர், விளாமிச்சவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார் போக அரிசி, பாசிப்பயிறு, பூலான் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மணிபுங்கு (பூவந்திகாய்) ஆகியவற்றை அரைத்து சூரணம்
செய்து தினமும் தேய்த்து குளித்து வர தோல் நோய்கள் அணுகாது. சோப்பை நிறுத்தவும்.
41. உங்கள் முகம் பாலீஷ் ஆக இருக்க :
எஸ்ஸன்ஸ் கடையில் 400 மில்லி வினிகர் வாங்கி 8 ரோஜா மலர்களை போட்டு ஒரு
நாள் ஊற வைத்து, தினமும் முகத்தில் பூசி வர முகம் பாலீஷ் ஆகும்.
42. கால் ஆணிக்கு மருந்து :
நாட்டு மருந்துக் கடையில் வெள்ளை குங்கிலியம் 10 கிராம், பூரம் 10 கிராம் வாங்கி சேர்த்து அரைத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து ஆணியில் கட்டி வர குணமாகும்.
43. தலையில் புழுவெட்டு வந்தால் :
கொடி வேலி இலைச் சாறு, மாதுளை விதை, உப்பு மூன்றையும் புழுவெட்டு உள்ள
இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
44. கால் பாத வெடிப்புக்கு :
சீரகம் 30 கிராம், சுண்ணாம்பு 60 கிராம், துருசு - 10கிராம் இவைகளை எருமை
வெண்ணெய்யில் அரைத்துப் போட கால் வெடிப்பு போகும்.
45.கண்டமாலை, பிளவை, அரை யாப்புக்கு :
மருதோன்றி இலை, நீலிஇலை, கார்த்திகை கிழங்கு, குன்னிமுத்து, எட்டி விரை, மருத மரத்து பட்டை, கசகசா, வசம்பு, காயம் இவைகளை மைபோல் அரைத்து பூச குணமாகும்.
46. மூல பவுந்திர புண்ணுக்கு :
காசுகட்டி, துத்தம், வெள்ளை குங்கிலியம் வகைக்கு 5 கிராம், சுண்ணாம்பு 20 கிராம்,
வெண்ணெய் 40 கிராம் எடுத்து இடித்து பொடித்து சிறு தீயிட்டு காய்ச்சி களிம்பாக்கி போட்டு வர குணமாகும்.
47. தலை பொடுகுக்கு தைலம் :
பொடுதலைச் சாறு, பூலான் கிழங்கு, பச்சைக் கற்பூரம் இவைகளை தேங்காய்
எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி தேய்க்க பொடுகு போகும் (பொடுதலைச் சாறு 200 மில்லி, பூலா - 20 கிராம், பச்சைக்கற்பூரம் - 4 கிராம். தேங்காய் எண்ணெய் - 400 மில்லி)
48. பெண்களுக்கு வரும் இடுப்பு புண்ணிற்கு :
கடுக்காய் தொலி, வேப்பிலை, மஞ்சள், இவற்றுடன் வெங்காயச் சாறு விட்டு அரைத்து இரவில் புண்களில் போட்டு காலையில் கடலை மாவு சேர்த்து தேய்த்து குளிக்க குணமாகும். குளித்த பின் தேங்காய் எண்ணெய் தடவவும், கூடுதலாக இருந்தால் கடுக்காயை சந்தன
கல்லில் உரசிப் போடவும்.
49. பாலுண்ணிக்கு :
சிகப்பு முள்ளங்கி இலையை வெயிலில் காய வைத்து எரித்து சாம்பலாக்கி அதை
விளக்கெண்ணெய்யில் குழைத்து பஞ்சில் வைத்து பாலுண்ணி மேல் வைத்து கட்ட
பாலுண்ணி உதிர்ந்து விடும்.
50. கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டால் :
சங்குப் பூ இலைச்சாற்றுடன் உப்பை சேர்த்து அரைத்துப் போட வீக்கம் வத்தும்.
51. அக்குள் தூர்நாற்றம் போக :
கண்டங்கத்திரி இலை சாற்றில் ஆழி விதையை அரைத்து போட்டு காய்ச்சி தேய்த்துவர துர்நாற்றம் ஒழியும்.
52. உடம்பில் அதிகமாக வியர்வை இருந்தால் :
காக்கண இலைச்சாறு, இஞ்சிச் சாறு, தேன் சேர்த்து காலை, மாலை வேளைக்கு 50 மில்லி சாப்பிட்டு வர வேர்வை நின்று விடும்.
குறிப்பு : அன்பான வாசகர்களே ! என்னுடைய 60 வருட மருத்துவ சேவையில் நான் கையாண்ட
மருத்துவக் குறிப்புகளை 128 பக்க அளவில் புத்தமாக எழுதி உள்ளேன். இந்த புத்தகத்தில் மனித சமூகத்திற்கு ஏற்படும் நோய்களைப் பற்றியும், விஷக் காய்ச்சல், ஆண்மைக் குறைவு பற்றியும் அதற்கான மருத்துவ குறிப்புகளையும் விவரமாக எழுதி உள்ளேன். இந்த புத்தகம்
உங்கள் வீட்டில், ஒரு மருத்துவர் இருப்பது போலிருக்கும். அன்பர்கள் வீட்டுக்கு ஒரு
புத்தகத்தை வாங்கி பயனடைய வேண்டுகிறேன். ரூ 120/ - டி.டி. எடுத்து கொரியர் மூலம்
பெற்று கொள்ளலாம்.
வாசக அன்பர்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு விரிவான செலவில்லா சித்த
மருத்துவ புக்கை பெற்று கொள்ளலாம்.
மருத்துவர்:
K.P.பால்ராஜ் RTSMP
S.V. கரை, திருநெல்வேலி - 627856
செல்:9487348703