செலவில்லாத சித்த மருத்துவம்

ayur1
கடி மற்றும் விஷமும் அதற்கான சிகிச்சை முரைகளும்
அன்பான வாசகர்களே! கடந்த மாதம் விஷக்கடிகளும் அதற்கான சித்த மருத்துவமுறைகளையும் எழுதி இருந்தேன். இந்த மாதம் அதன் தொடர்ச்சியாகவிஷக் கடி பற்றி எழுதுகிறேன்.
11. பெருச்சாளி கடிக்கு
நாட்டி மருந்துக் கடையில் கிடைக்கும் சுத்தி செய்த அப்ரக பஸ்பம் இரண்டு மில்லி கிராம் எடுத்து மலைவேம்பு கசாயத்தில் சேர்த்து கொடுக்க குணமாகும். நில ஆவாரை வேரை அரைத்து வென்னீரில் கலந்து கொடுக்கலாம். கடிவாயிலும் பூச விஷம் தீரும்.
12. சிலந்தி கடித்து விட்டால்
ஆடா தொடை இலை இருபத்தி ஐந்து கிராம் பச்சை மஞ்சள் இருபது கிராம், மிளகு பத்து கிராம் துளசிச் சார் விட்டு மூன்றையும் அரைத்து கடித்து இடத்தில் கட்டவும். மூன்று நாட்கள் கட்ட தீரும். அவுரியை (நீலி) கசாயம் கோட்டு மூன்று நாட்கள் குடிக்க விஷம் தீரும். சிலந்திக் கடியால் ஏற்படும் கொப்புளத்திற்கு தெளிந்த சுண்ணாம்பு நீர் ஐம்பது மில்லி, தேங்காய் எண்ணெய் ஐம்பது மில்லி சேர்த்து கொப்புளத்தின் மேல் போட்டு வர குணமாகும்.
13. தவளை கடிப்பதாலோ அல்லது நீர் பட்டாலோ சொரி, ஊரல் உண்டாகும்.
ஒட்டடை, உப்பு, உத்தாமணிவேர் (வேலி பருத்தி) மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து குழந்தைகளின் நீர் விட்டு அரைத்து கடிவாயிலும் சரீரம் முழுவதும் பூசி இரண்டு மணி நேரம் கழித்து குளித்து விட குணமாகும்.
14. பல்லி கடித்தால் சிகிச்சை
பெருங்கரந்தை வேர், குதிரை செவி மரத்தின் வேர் வகைக்கு எழுபது கிராம் பாகல் இலைச் சாறு, பசும்பால் வகைக்கும் ஐம்பது மில்லி சேர்த்து அரைத்து குழப்பி கடிவாயிலும் சரீரம் முழுவதும் பூசி இரண்டு மணி நேரம் கழித்து குளிக்க விஷம் இறங்கிவிடும்.
15. தேன் ஈ கொட்டினால்
மண் எண்ணெய் அல்லது நாயுருவி இலை ஏதாவது ஒன்றை அரைத்து கொட்டுவாயில் தேய்க்க கடுகடுப்பு அடங்கிவிடும். சுண்ணாம்பு பொட்டாஷியம் பர்மாங்கனேட் இரண்டையும் தேய்க்கலாம். பச்சை வெங்காயத்தை இரண்டாக வெட்டி கொட்டு வாயில் தேய்க்க முள் வெளிவரும். கடுப்பு அடங்கிவிடும். மூத்திரத்தை மண்ணில் குழைத்து பூசினாலும் கடுகடுப்பு போகும்.
16. வண்டுகடிக்கு
வண்டு கடித்தவுடன் ஒன்ரும் தெரியாது. கொஞ்ச நேரம் கழித்து அரிப்பும் வட்ட வட்டமான தடிப்பும் தோன்றும், அவரைச் செடி சமூலத்தையும், நீரடி முத்து நூறு கிராம் உலர்த்தி தூள் செய்து இரண்டையும் ஒன்ரு சேர்த்து எழுமிச்சை சார் விட்டு அரைத்து கடிவாயில் பத்து போட்டு உலர்ந்த பின் மேலால் தேங்காய் எண்ணெய் தேய்க்கவும். ஆடு தின்னா பாளையின் வேர் நூறு கிராம் எடுத்து ஒரு வாரம் குடிக்க குணமாகும். (உப்பு, புளி நீக்கவும்)
17. சகல விஷங்களுக்கும்
ஆடுதிண்ணா பாளை வேர் அவுரி இரண்டையும் சூரண்ம செய்து தேன் அல்லது பாலுடன் காலை மாலை ஒரு வாரம் சாப்பிட சகல விஷமும் இறங்கும்.
18. நாள்பட்ட விஷக் கடிகளுக்கு

வெள்ளருக்கன் வேர் இரண்டு கிராம், சிரியா நங்கை வேர் இருபது கிராம் வெள்ளை காக்கணம் வேர் இருபது கிராம் மூன்றையும் அரைத்து ஐம்பது கிராம் கருப்பு கட்டியில் சேர்த்து மூன்று பாகம் ஆக்கி ஒவ்வொரு பாகத்தையும் மூன்று பங்காக்கி மாலை, மதியம், இரவு சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட எல்லா விஷங்களும் இறங்கி விடும். புளி நீக்கி மோர், ரச சாதம் சாப்பிடவும்.
19. சாரை பாம்பு கடித்தால்
தான்னிக்காய், புன்னைக்காய், கழச்சிக் காய், அழுஞ்சில் கடுக்காய், மகிழ், புங்கு கார்போக அரிசி இவைகளை குழித்தைலம் இறக்கி வெற்றிலை சாற்றில் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்க இஷம் இறங்கும். (உப்பு புளி நீக்கவும்) பிண்ணாக்கு சமூலத்தை உள்ளுக்கும் கொடுத்து வெளியிலும் பூச வேண்டும்.