செலவில்லா சித்த மருத்துவம்

sidha

எனது அன்பான வாசக நண்பர்களே! கடந்த இரண்டு மாதமாக கடி அல்லது கொட்டும்
விஷம் பற்றியும், இதர விஷக்கடி விஷம் பற்றியும் எழுதி வந்தேன். இந்த மாதம் சர்ப்ப விஷம்
பற்றி எழுதுகிறேன்.
சர்ப்பம் என்ற நாகப் பாம்பு தானாக வந்து யாரையும் கடிப்பதில்லை. நாம் அதனோடு
உறவாடும் போதுதான் அது தற்காப்பிற்காக தீண்டி விடுகிறது. நாம் நமது வீட்டை சுற்றிலும்,
செடி செத்தைகள் இல்லாது பார்த்து கொள்ள வேண்டும். வீட்டு சுவர்களிலோ, கதவுகளிலோ
சிறு துவாரம் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து வெளியே
போகும் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு போட்டிருக்க வேண்டும். உப்பு, நெருப்பு
இரண்டையும் பயன்படுத்தி பாம்பை விரட்டலாம்.
நல்லபாம்பு (நாகம்) தீண்டிவிட்டால் வெகு விரைவில் மூச்சு அடைபட்டு மரணம்
ஏற்படும். ஆகவே இது போன்ற பாம்பு தீண்டி விட்டால் 20 நிமிடத்திற்குள் சிகிச்சை
மேற்கொள்ள வேண்டும். முதலில் கடிவாய்க்கு மேலே ஈரத்துணி அல்லது ரப்பர் கொண்டு
இரண்டு இடத்தில் கட்டு போட வேண்டும்.
எந்த ஜாதி வாழையாயினும் அதன் மடல்களை வெட்டி சாறு பிழிந்து 1/2 லிட்டர் வரை
கடிபட்டவருக்கு உள்ளுக்கு கொடுக்க வேண்டும். அவருக்கு பல் கட்டினால் வாழை
பட்டைகளை விரித்து அதில் கடிபட்ட நபரை படுக்க வைக்கவும். கொஞ்சம் வசம்பை பொடி
பண்ணி மூக்கில் வைத்து ஊதினால் வாய் திறக்கும். பாம்பின் விஷத்திற்கு வாழை சார் அமிர்த
சஞ்சீவியாகும். 50 மில்லி வேப்ப எண்ணெய் கொடுத்தால் விஷம் ஏறுவது தடைபடும்.
சிறியா நங்கை, பெரியா நங்கை பச்சிலையை அரைத்து நெல்லிக்காய் அளவு உள்ளுக்கு
கொடுக்க விஷம் இறங்கும். இரண்டு நாள்கள் உப்பில்லா பத்தியம்.
ஆகாசகருடன் கிழங்கை பொடியாக்கி 70 கிராம் எடுத்து 100 மில்லி வேப்ப
எண்ணெய்யில் சேர்த்து கிண்டி மருந்து கருகி வரும்போது மத்தால் கடைந்தால் லேகியம்
போல் வரும் இதில் கொட்டை பாக்களவு கொடுக்க விஷம் எறாது. 3 தினங்கள் உப்பு, புளி
நீக்கவும்
காஞ்சாங்கோரை சாற்றை எடுத்து 8 அவுன்ஸ் கொடுக்கலாம். சாரணைவேர்,
ஆடுதின்னா பாளை, புங்கன்வேர், சிறு குறிஞ்சான், துளசி, சுக்குமுல்லை இலைகளை சம
எடை எடுத்து குப்பைமேனி சாற்றில் அரைத்து கடிவாயிலும் உடம்பு முழுவதும் பூசினால்
விஷமெல்லாம் இறங்கிவிடும்.
பாம்பு கடிபட்டவரின் சிறு நீரை உடன் குடிக்க வைப்பது நல்லது. வெள்ளை
காக்கரட்டன் (சங்கு புஷ்பம்) வேரை சிறு பிள்ளை நீரில் அரைத்து கொடுக்க பாம்பு விஷம்
போகும். பாம்பு கடிபட்டவன் பக்கத்தில் இருந்து கொண்டு ஐயோ பாம்பு கடித்து விட்டதே,
என்ன ஆகுமோ, ஏது ஆகமோ என்று காட்டு கூச்சல் போட கூடாது. அவ்வாறு செய்தால்
அச்சத்தில் கடிபட்டவனுடைய இதயம் வேகமாக அடித்து இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் விஷம்
உடல் முழுவதும் பரவி மரணம் ஏற்பட வாய்ப்பாகும். நெருப்பில் காட்டிய சவர பிளேடால்
கடிவாயை கீறி இரத்தத்தை வெளியே எடுக்கலாம். அப்போது விஷம் வெளியே வந்துவிடும்.
மண்ணெண்ணெய் கொண்டும் கடிவாயில் தேய்த்துக் கொண்டே இருக்க விஷம் இறங்கும்.
முக்கிய கவனிப்பு : விஷம் தீண்டியவர்கள் மருந்து சாப்பிடும் போது சில விதிமுறைகளை
கடைபிடிக்க வேண்டும். உப்பு, புளி நல்லெண்ணெய் அறவே நீக்க வேண்டும். விஷம்
இறங்கும் வரை பகல் இரவு தூங்க கூடாது. பசுவின் பாலில் பச்சரிசி, பாசிப்பயிறு,
பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி கொடுக்கலாம். விஷம் நன்கு இறங்கிய பிறகே கடுகு, உப்பு,
புளி நல்லெண்ணெய் சேர்ப்பது நல்லது.
குறிப்பு : அன்பான வாசகர்களே ! என்னுடைய 60 வருட மருத்துவ சேவையில் நான் கையாண்ட மருத்துவக் குறிப்புகளை 128 பக்க அளவில் புத்தமாக எழுதி உள்ளேன். இந்த புத்தகத்தில் மனிதர்களுக்ககு ஏற்படும் நோய்களைப் பற்றியும், விஷக் காய்ச்சல், ஆண்மை குறைவு பற்றியும் அதற்கான மருத்துவ குறிப்புகளை விவரமாக எழுதி உள்ளேன். இந்த புத்தகம் உங்கள் வீட்டில், ஒரு மருத்துவர் இருப்பது போலிருக்கும் அன்பர்கள் வீட்டுக்கு ஒருபுத்தகத்தை வாங்கி பயனடைய வேண்டுகிறேன். ரூ 130/ - ஆ.டீ. செய்து கொரியர் மூலம்
பெற்று கொள்ளலாம்.
வாசகர்கள் கவனத்திற்கு :
வரும் 15.10.2016 அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு
எதிரே உள்ள ஹோட்டல் ராஜாவில் அதன் உரிமையாளர் ஹாஜி. ஜனாப் முஸ்தபா கமால்
அவர்கள் முன்னிலையில் சித்த மருத்துவத்தின் விரிவான விளக்கத்தை நான் கூற உள்ளேன்.
இந்த இலவச சேவையில் வாசகர்கள் அனைவரும் தவறாது கலந்து பயனடைய
வேண்டுகிறேன். பயிற்சி வரும் வாசகர்கள் போன் மூலம் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
மருத்துவர்: பால்ராஜ் , திருநெல்வேலி - 627856
செல்:948734870