செலவில்லாத சித்த மருத்துவம்

cithss

அன்பான வாசகப் பெருமக்களுக்கு வணக்கம். கடந்த மாதம் வரை தனிப்பட்ட ஒவ்வொரு நோய்க்கான மருத்துவ குறிப்புகள் எழுதி வந்தேன். இந்த மாதம் முதல் பலதரப்பட்ட நோய்களுக்கும் அதற்கான மருந்துகள் பற்றியும் விவரமாக எழுதுகிறேன்.
1. ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு:
வேப்பிலை, அத்திமொட்டு, முருங்கைஇலை பூ, அகத்திஇலை, மாமொட்டு இவைகளை சமமாக எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு காலை-மாலை வேளைக்கு ஒரு மாத்திரை பசும்பாலுடன் சாப்பிட விந்து கட்டும், ஆண்மை சக்திகூடும். 40நாட்கள் சாப்பிடவும்.
2. மூலமுளை நோய்க்கு:
சுண்டங்கத்திரி பூவையும், வாதுமை நெய்யையும் சேர்த்து வதக்கி மூலத்தில் வைத்து கட்டிவந்தால் மூலக் கடுப்பு அடங்கும் மூலமும் சுருங்கும்.
3. அண்டி வெளிதள்ளும் மூலத்திற்கு:
கடுக்காய்ப் பொடி அல்லது மாசிக்காய் பொடியை மூலத்தில் தடவிவர மூலம் சுருங்கும்.
4. புழு வெட்டுக்கு:
உப்பும், மாதுளம் பழ விதையையும் 1க்கு 3 பங்கு சேர்த்து அரைத்து நீரில் குழைத்து தேய்த்து வர புழு வெட்டில் முடி முளைக்கும்.
5. தொப்புள் புண்களுக்கு:
வெண்காரத்தை நீரில் கரைத்து கழுவி வர வேண்டும். உலர்ந்ததும் மஞ்சள் பொடியை தூவி வர வேண்டும்.
6. தலையில் பேன் ஈறு ஒழிய:
புகையிலைப் பொடி, படிகாரப்பொடி இரண்டையும் நீரில் கரைத்து தலையில் தேய்த்து 2 மணி நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து குளிக்க ஈறு, பேன் ஒழியும்.
7. பல் வலி, ஈறு வீக்கத்திற்கு :
கிராம்புப் பொடி, ஓமப்பொடி, கற்பூரப்பொடி, கடுக்காய்ப் பொடி இந்நான்கையும் சமமாக ஒன்று சேர்த்து, வலி உள்ள இடத்தில் சிறிதளவு எடுத்து வைத்து அடக்கிக் கொண்டால் வலியெல்லாம் போய் விடும்.
8. ஜலதோஷம்:
முருங்கை இலைச்சாறு அல்லது கற்பூரவல்லி இலைச்சாறு இவற்றுடன் தேன் சமமாக சேர்த்து வேளைக்கு 1 டீஸ்பூன் வீதம் காலை, மதியம், மாலை உணவுக்கு முன்பு சாப்பிட்டால் ஜலதோஷம் தீரும்.
9. தொண்டைகட்டுக்கு:
குப்பைமேனி இலையையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து தொண்டையின் வெளிப்புறத்தில் தடவ குணமாகும்.
10. தலை வலிக்கு :
படிகாரத்தை பொடித்து லு டீஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க குணமாகும்.
11. இரத்த அழுத்தம் உள்ளவர்கள்; :
உப்பையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்து தினமும் 1டீஸ்பூன் அளவு வெந்தயத்தை சாப்பிட்டு வர நலமாகும்.
12. தொண்டையில் உண்டாகும் புண்களுக்கு:
மாதுளம் பழத்தின் பூ மற்றும் பிஞ்சுகாய் தோலை கசாயம் இட்டு வாயில் இட்டு கொப்பளிக்க தீரும்.
13. வயிற்றில் உண்டாகும் கிருமிப் புழுக்களுக்கு:
மாதுளை மரத்தின் வேர், தொலி 5 கிராம் எடுத்து அரைத்து 100 மில்லி காய்ச்சிய பாலுடன் அதிகாலை வெறும் வயிற்றில் குடிக்க புழுக்கள் வெளியேறும். 2 மணிக்கு பிறகே உணவு உட்கொள்ளவும்.
14. வாய்வுக்கு:
முருங்கைப்பட்டை 5கிராம், காயம் 2கிராம் சேர்த்து அரைத்து வெந்நீரில் குடிக்க வாய்வு தீரும்.
15. மூல, பவுத்திர புண்ணுக்கு:
தேங்காய் எண்ணெய்யில் மெழுகு, குங்கிலியம் வகைக்கு 10கிராம் மஞ்சள் பொடி 2 கிராம் போட்டு காய்ச்சி துணியில் தடவி புண்களின் மேல் வைக்க புண் ஆறும்.
16. ஆவாரம் பூ, கடலை மாவு இரண்டையும் பசும்பாலில் அரைத்து முகத்தில் பூசி லு மணி நேரம் கழித்து இளம் வெந்நீரில் கழுவிவர முகம் பாலீஷ் ஆகும்.
மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மருத்துவர் : K.P. பால்ராஜ்