செலவில்லா சித்த மருத்துவம்

அன்பு மிக்க வாசக நண்பர்களுக்கு நோய் பற்றிய சந்தேகங்களை அதை குணமாக்கும் வைத்திய முறைகளை கடிதம் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ கேட்டு தெரிந்து கொள்ளவும். நான் எழுதிய செலவில்லா சித்த மருந்துவ புத்தகம் அனைவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய மருத்துவப் புத்தகம். வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
46. மூலமுளை நோய்க்கு :
முள்ளங்கி கிழங்கையும் பிண்ணாக்கு கீரை இரண்டையும்

சேர்த்து கறிசமைத்து சாப்பிட்டுவர குணமாகும்.
47. துர் நாற்றம் உள்ள கழிச்சலுக்கு :

பெருமரத்து(மருதமரம்) பட்டையை மைபோல் அரைத்து மோரில் கலக்கி குடிக்க கெட்டவாடைதீரும்.
48. வயிற்று கடுப்பிற்கு :

துத்தி வேரை நன்கு அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்து மோரில் கலக்கி குடிக்க குணமாகும் .
49. சகல விதமான வாய்வுக்கும் :

மிளகு, ஓமம், வெந்தயம், சீரகம், தைவேளை வேர் இவைகளை சமபாகம் எடுத்து பொன் வறுவலாக வறுத்து பொடியாக்கி 1 டீஸ்பூன் தேனுடன் சாப்பிட வாய்வு தொல்லை தீரும்.
50. குன்மவலி மற்றும் வயிற்று புண் :

தோல்சீவிய சுக்கு , பொறித்த வெண்கரம். வறுத்த ஓமம், வறுத்தமிளகு வகைக்கு 10 கிராம் எடுத்து, அதில் ¼ பங்கு பெருந்தும்பை கொழுந்து சேர்த்து எருமை மோர்; விட்டு அரைத்து காலை, மாலை, 1டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர குன்மவலிநோய் தீரும் .

51. சிலந்தி புண் , சிரங்கிற்கு :

சுத்தித்த இரசம் 2கிராம், நீரடி முத்து , துருசு , கெந்தகம் வகைக்கு 4கிராம் இவைகளை வெற்றிலை சாறு கொண்டு அரைத்து மேலால் போட்டு வர குணமாகும். 300மில்லி நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தேய்கவும் குணமாகும் .
52. பித்தத்திற்கு :

பித்தம் வந்தால் தலை சுற்றும் உடல் வறச்சியாக காணப்படும் எலுமிச்சைசாறும், துளசி சாறும் வகைக்கு 100மில்லி சேர்த்து சாக்கரை சேர்த்து குடிக்க குணமாகும் .
53. கடுப்பு , கழிச்சல் , இரத்த , சீதபேதிக்கு :

மாதுளம் பழ ஓட்டையும் , புளியங் கொட்டை மேல் ஓட்டையும் ,சமபாகம் எடுத்து பொடியாக்கி வேளைக்கு 1 டீஸ்பூன் அளவு எடுத்து தேன் அல்லது வெண்ணெய் அல்லது மோருடன் சாப்பிட நோய் தீரும் .
54. இருமல் குணமாக :

திப்பிலி, கிராம்பு இவைகளை சமமாக எடுத்து வறுத்து பொடியாக்கி ½ டீஸ்பூன் அளவு எடுத்து தேனுடன் சாப்பிட இருமல் குணமாகும் .
55. ஜுரம் அல்லது காய்ச்சல் குணமாக :

வில்வ இலையை 1பிடி எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு , சீரகம் , வகைக்கு 20கிராம் சேர்த்து இடித்து எல்லாவற்றையும் ½ லிட்டர் தண்ணீரில் போட்டு 100மில்லி வரும் வரை காய்ச்சி குடித்தால் ஜுரம் தணியும் .
56. ஈளை, இருமல் , ஆஸ்து மாவிற்கு :

கண்டங்கத்தரிவேர் , ஆடாதொடை வேர் வகைக்கு 40கிராம், அரிசி திப்பிலி 5கிராம் சேர்த்து இடித்து 2 லிட்டர்; தண்ணீரில் போட்டு ½ லிட்டர் வரும் வரை காய்ச்சி வேளைக்;கு 100மில்;லி வீதம் தினம் 4 வேளை குடித்து வர குணமாகும் .
57. தேகம் பெலன் பெற :

நத்தை சூரி விதையை இடித்து சூரணமாக்கி தினம் 2கிராம் அதாவது 1 டீஸ்பூன் அளவு காய்ச்சிய பாலுடன் சேர்த்து சாப்பிட்டுவர தேகம் பெலன் பெற்று விந்து அதிகரிக்கும் .
58. விக்கல், வாந்தி, இருமல், ஜுரத்திற்கு :

கண்டங்கத்திரி விதை, அமுக்கா, திப்பிலி இவைகளை சமஅளவு எடுத்து இடித்து சூரணமாக்கி வேளைக்கு 1டீஸ்பூன் வீதம் தினம் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளை தேனுடைன் சேர்த்து சாப்பிடகுணமாகும்.
59. புண்கள் குணமாக :

கெந்தகம் , காவிக்கல் , களிப்பாக்கு இவைகளை சமஅளவு எடுத்து இடித்து பொடித்து தேங்காய் எண்ணெய்யில் குழைத்து போட்டு வர புண்கள் ஆறிவிடும்.
60. உடல்வலி, கை, கால்கள் அசதிபோக:

முடக்காத்தன் இலையை அரிசி மாவுடன் சேர்த்து அரைத்து அடைசெய்து சாப்பிடவலியெல்லாம் போய் விடும்.
குறிப்பு : தேவையான மருந்துக்களை ஊரில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கிகொள்ளலாம்.
மருத்துவர் : k.P .பால்ராஜ் திருநெல்வேலி மாவட்டம்