செலவில்லா சித்த மருத்துவம்

61. இதய படபடப்பு அடங்க : புதினா இலையை இடித்து நீரில் போட்டு காய்ச்சி குடிநீராக்கி அதில் பாலும் தேனும் சேர்த்து குடிக்க சுகம் கிடைக்கும்.
62. மலக்கட்டு வயிற்று நோவு தீர : வேப்பிலை கொழுந்து, அதிமதுரம், சர்க்கரை இவைகளை சமமாக எடுத்து விழுதாக அரைத்து நெய்யில் வேக வைத்து 2கிராம் அளவில் சாப்பிட்டால் மலக்கட்டு நீங்கி வயிற்று நோய் தீரும்.
63. மூக்கடைப்பு தீர : கர்ப்பூரம் 1கிராம், நவச்சாரம் 4கிராம் எடுத்து பொடியாக்கி முகர மூக்கடைப்பு உடன் தீரும்.
64. படர்தாமரை சொறி சிரங்கிற்கு : அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பு, தகரவிதை, காஞ்சாங்கோரை அல்லது பேய் துளசி இவைகளை சம அளவு எடுத்து மோர் விட்டு அரைத்து மேலால் பூசிவ ர குணமாகும்.
65. ஜன்னி, வலிப்பு, மூச்சுக்குத்து, காக்காய் வலிப்புக்கு : அவுரி அல்லது நீலி, உள்ளி, வசம்பு இவைகளை ஒன்றாய் சேர்த்து இடித்து முகரச் செய்தால் தீரும்.
66. வயிறு கழிச்சலை நிறுத்த : விளாம் பிசினை பொடித்து எருமை தயிரில் சேர்த்து குடிக்க கழிச்சல் நின்றுவிடும்.
67. சகல வாய்வுக்கும் : சீரகம், இந்துப்பு, ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுஞ்சீரகம், பெருங்காயம் இவைகளை சம எடையாக எடுத்து, வறுத்து தூள் செய்து வேளைக்கு 1ஸ்பூன் அளவு பொடியை தேன் அல்லது நெய்யில் சேர்த்து சாப்பிட குணமாகும்.
68.சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு : அதிமதுரம், கடுக்காய் தொலி, மிளகு சம அளவாக எடுத்து இளம் வறுப்பாய் வறுத்து தூள் செய்து வேளைக்கு 1டீஸ்பூன் தேனுடன் தினம் 3 வேளை சாப்பிட குணமாகும்.
69.நரம்பு பிடிப்புக்கு : நண்டு சாற்றையும், ஆமணக்கு எண்ணெய்யும் சமபாகமாக எடுத்து காய்ச்சி பிடிப்பு உள்ள இடத்தில் தேய்க்க தீரும்.
70.பவுத்திர நோய் தீர : குப்பைமேனி தூள், திப்பிலி தூள் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து 2 டீஸ்பூன் அளவு பொடியை 1வேளைக்கு பசு நெய்யில் கலந்து தினம் 1வேளை 40 நாட்கள் காலை தோறும் சாப்பிட குணமாகும்.
71. சகல சிரந்தி நோய்க்கும் : சுத்தித்த ரசம் 2கிராம், நீரடி முத்து, துருசு, கெந்தகம் வகை;கு 5கிராம் எடுத்து வெற்றிலை சாற்றில் அரைத்து 200 மில்லி நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி உடம்பில் தேய்த்து வரகிரந்தி நோய் தீரும்.
72. அரையாப்பு புண்ணுக்கு : பச்சை கொடிவேலி வேர் தொலியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து போட குணமாகும்.
73. உடல் வலிமை உண்டாக : வாதுமை பருப்பு, வெந்தயம், கசகசா, கோதுமை மாவு, நெய், பால், சர்க்கரை சேர்த்து காய்ச்சி தேன் சேர்த்து சாப்பிட்டு வர உடல்வலிமை பெறும்.
74. நல்ல தூக்கம் வர : திப்பிலியை ஒன்று இரண்டாக இடித்து பசும்பாலில் அவித்து காயவைத்து பொடியாக்கி 300 மில்லி பாலில் 2கிராம் பொடியை போட்டு தினம் இரவு சாப்பிடநல்ல தூக்கம் வரும்.
75. உடல் உறவில் பலன் பெற : நிறுநெஞ்சில் காய்களை பால்விட்டுஅவித்து நிழலில் காய வைத்துஇசம பங்கு பாலில் அவித்து காயவைத்த அமுக்கரா சேர்த்து இடித்து இரண்டையும் சூரணமாக்கி பசும்பாலில் வேளைக்கு 1 டீஸ்பூன் காலை, இரவு உணவுக்கு பின்பு சாப்பிட்டு வர உடல் உறவு பெலன் உண்டாகும்.
76. உடல் சூடு காங்கை குறைய : 1கிலோ தாமரை பூவை நிழலில் காய வைத்து 3லிட்டர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் அந்த நீரை 1 லிட்டர் வரும் வரை காய்ச்சி வடிகட்டி 1 கிலோ சர்க்கரை சேர்த்து தேன் பதம் வரும் வரை காய்ச்சி 15 மில்லி அளவு 1 கிளாஸில் ஊற்றி நீர் சேர்த்து குடிக்க சூடு தணியும்.
77. உடல் பருமன் குறைய : நீர்முள்ளி சமூலம் 200 கிராம், நெருஞ்சில் முள்இ சோம்பு அல்லது பெருஞ்சீரகம், கொத்தமல்லி வகைக்கு 50 கிராம் சேர்த்து இவைகளை 2 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி ½ லிட்டர் ஆனதும் தினம் 125 மில்லி குடித்து வர உடல் பருமன் குறையும்.
78. வயிற்று போக்கு குணமடைய : குங்கிலியம் 5 கிராம், மாம்பருப்பு 10 கிராம் இலவம் பிசின் 5கிராம், ஜாதிக்காய் 10 கிராம், சேர்த்து அரைத்து வேளைக்கு 1டீஸ்பூன் அளவு தேனுடன் சாப்பிட வயிற்றுபோக்கு நிற்கும்.

79. உங்கள் வீட்டு பசுக்கள் பால் சுரக்க : முள்ளுகீரை, கொள்ளு, கடலைபருப்பு சமம் சேர்த்து அரைத்து வேகவைத்து பசுவிற்கு ஊட்ட பால் நிறைய சுரக்கும்.
80. குடல் கிறுமிகள் சாக : பேய்த்துளசி அல்லது காஞ்சாங் கோரை இலையை அரைத்து ஆசன வாயில் வைத்தால் குடல் புழுக்கள் மடிந்து போகும். இதை சொறி சிரங்கிற்கும் தேய்த்து குளிக்கலாம்.
செலவில்லாத சித்த மருத்துவ புத்தகம் - தென்காசி புக் ஸ்டால்களில் கிடைக்கும்
தொடரும்.......
மருத்துவர் : K.P. பால்ராஜ் . RTSMP.SI.
S.V.கரை - 627856
திருநெல்வேலி மாவட்டம்
செல் : 94 87 34 87 03