"தமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு - 2018"

தமிழக முஸ்லிம் சமூகம் பலநூறு ஆண்டுகளாக வகித்திருந்த "சர்வதேச வணிகத்தில் முதன்மைச் சமூகம்" என்ற வரலாற்று மரபை மீட்டெடுக்க வேண்டும்.... முஸ்லிம் சமூகத்தில் பொருளாதார மறுமலர்ச்சிக்கான இந்த தொலை நோக்கு இலக்கின் முதல் நிகழ்வாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் - அமீரகம் சார்பில் "தமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு - 2018" துபாயில் நடைபெற்றது.

அரபுலகம் இந்தியா சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தொழில் செய்யும் உம்மத்தின் இளம் தொழில் முனைவோர் ஒருவரை ஒருவர் அகத்தாலும் முகத்தாலும் அறிமுகமாகி கொள்ளும் நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது. பல துறைகளில் தொழில் வர்த்தகம் செய்வோர் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். வருகை தந்திருந்த அனைவரும் தங்களது தொழில் நிறுவனம் குறித்து மற்றவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம் செய்தனர்.

GCC என்ற 6 அரபுநாடுகள் இந்தியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் மற்றும் அந்நாடுகளின் சட்ட திட்டங்களை அறிந்து அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டன.

தமிழக முஸ்லிம்களின் கல்வி அமைப்பில் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு அது தொடர்பான அனைத்து துறைகளிலும் பணியாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் இயக்கம் கல்வியோடு தொடர்புடைய பொருளீட்டல் துறையில் முஸ்லிம் சமூகம் தனது பாரம்பரியப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

மிக முக்கியமாக...... பெட்டிக்கடை முதல் பன்னாட்டு நிறுவனம் வரை தமிழக முஸ்லிம்களின் வணிக முறைமை இஸ்லாமிய வரம்பிற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் என்பதை சமூகத்தில் ஆழமாக பதித்து வருகிறோம். அதுவே சமூக வெற்றிக்கான மந்திரக் கோல்.

இஸ்லாமிய முறைமைக்கு உட்படாமல் முஸ்லிம்கள் சிலரின் வியாபார உத்திகள் சமூகத்திற்கும் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கும் மிகப் பெரிய தீமையை ஏற்படுத்தி விடும்.

சிந்தனை மாற்றம்தான் அனைத்து மாற்றத்திற்கும் அடிப்படையானது.
முஸ்லிம்களின் கல்வி தொழில் வாழ்வியல் என அனைத்துமே பொதுச் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் குணமுடையதாக அதன் இயல்பிலேயே அமைந்துள்ளது என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்..... தமிழகம் முழுவதும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர உள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் தொழில்துறை ஒருங்கிணைப்பும் மேம்படுத்தலுக்கான பயிற்சியும் நிதியாதாரத்திற்கு மிகச் சரியான கட்டமைப்பும் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை.