saleem

saleem

Write on புதன்கிழமை, 17 அக்டோபர் 2018

திராவிட இயக்கம் கடந்து பாதை, ஜின்னாவின் புகைப்பட அரசியல் ஆகிய இரண்டு கட்டுரைகளையும் படித்த போது ஒரு அரசியல் புரிதல் என்னுள் ஏற்பட்டது. வடமாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான சமூகப் பதற்றம், தமிழகத்தில் இருக்கும் சமூக இணக்கம் என இருவேறுபட்ட உணர்வுகளுக்குப் பின்னால் இருப்பது அரசியலை முஸ்லிம்கள் நுணிக்கமாக வாசித்துணர்வது அவசியம். இந்த அரசியலை புரிந்துகொள்ளாமல் அரசியல் செய்யவும் முடியாது, தேர்தலில் வெற்றி பெறவும் முடியாது என்பதை தேர்தலை சந்திக்கும் முஸ்லிம் கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Write on புதன்கிழமை, 17 அக்டோபர் 2018

முதல் தலைமுறை மனிதர்கள் தொடரில் சமுதயாப் போராளி கண்ணியத்திற்குரிய ஜனாப் சாகுல் ஹமீது சாகிப் அவர்களின் வரலாற்றுப் பின்னணியில் “மீனாட்சிபுர மக்கள் இஸ்லாமியர்களாக தங்களை மாற்றிக் கொண்ட வரலாற்று நிகழ்வையும், அதன் பின்னால் நடந்த அரசியல் மற்றும் சமூக சிக்கல்களையும்” அறியும் சந்தர்ப்பம் அமைந்தது. அல்ஹம்து லில்லாஹ்… நமது முந்திய தலைமுறை மனிதர்களின் அர்ப்பணிப்புகளை சமூக மன்றத்துக்கு தொடர்ந்து கொண்டுவந்து சேர்க்கும் சேயன் இபுறாஹீம் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்

Write on புதன்கிழமை, 17 அக்டோபர் 2018

ஜின்னாவின் புகைப்பட அரசியல் கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை. இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்படுகிற காலகட்டத்தில் நடைபெற்ற அரிய வரலாற்றுத் தகவல்களும், வரலாற்று செய்திகளும் முக்கியமானவை. அந்த வரலாற்று நிகழ்வுகளே இன்றைய இந்தியாவின் பல்வேறு சிக்கல்களுக்கும், சிறப்புகளுக்கும் காரணமாக அமைந்துள்ளதை இந்தக் கட்டுரையின் பின்புலத்தில் உணர முடிகிறது. இந்திய மாகாணங்களில் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் 1937 இல் பெற்ற தேர்தல் வெற்றியே இந்தியாவை இருகூறாக பிளக்கும் துணிச்சலை காங்கிரசுக்கு தந்தது. இன்று முஸ்லிம்கள் இல்லாமல் வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தால்தான் இந்திய சமூகத்தை மதத்தின் பெயரால் பிரிவினை செய்ய பா.ஜ.க. துணிந்துள்ளது. “தேர்தல் அரசியல் முஸ்லிம்களை நிரந்தர சிறுபான்மை மக்களாக மாற்றிவிடும்” என்ற ஜின்னாவின் அச்சம் உண்மையாகி இருக்கிறது. இந்த அரசியல் பின்னணியை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Write on புதன்கிழமை, 17 அக்டோபர் 2018

செப்டம்பர் மாத அட்டைப் படம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. திராவிட இயக்கம் கடந்து பாதை கட்டுரையும் சிறப்பான தொகுப்பாக அமைந்தது. தமிழகத்தின் தனித்துவமான “சமூகநீதி” க்கான பயணம் பல தனி நபர்கள், இயக்கங்களின் அயராத உழைப்பால் முன்னெடுக்கப்பட்டதை படித்த போது ஆச்சரியப்பட்டுப் போனேன். எல்லோருடைய எண்ணமும் சிந்தனையும் எல்லோருக்கு எல்லாமும் கிடைக்க பாடுபடுவதாகவே அமைந்துள்ளது. நாமும் அந்த சிந்தனையை சமூகநீதிப் பயணத்தை முன்னெடுத்துத்துச் செல்ல ஊக்கமாக இந்த கட்டுரை அமைந்தது.

Write on புதன்கிழமை, 10 அக்டோபர் 2018
Write on புதன்கிழமை, 10 அக்டோபர் 2018

வட்டியை ஒழிக்க நபிகளார் இஸ்லாத்தை நிபந்தனையாக விதிக்கவில்லை.
*****************************
நாட்டில் உள்ள அனைவரும் முதலில் இஸ்லாத்தை தழுவ வேண்டும் என்ற எந்த நிபந்தனையையும் நபிகளார் விதிக்கவில்லை.
*****************************
இந்தியச் சமூகத்தின் வறுமை ஏழ்மை அறியாமை போன்ற திட்டமிட்டு உண்டாக்கப்பட்ட பின்னடைவுகளுக்கும் கொலை கொள்ளை தற்கொலை லஞ்சம் ஊழல் விபச்சாரம் போன்ற சமூக வர்க்க சீரழிவுகளுக்கு அடிப்படை காரணமாகவும் ஆதராமாகவும் இருப்பது வட்டி அடிப்படையிலான ஈனத்தனமான ஆட்சி முறை தான்.
130 கோடி இந்திய சமூகத்தில் 20 கோடி முஸ்லிம்கள் தவிர்த்த சமூகத்தில் வட்டித் தொழில் தவறில்லை அது எதார்த்தமானது அதிகம் சிரமப்படாமல் சம்பாதிக்கும் கலைகளில் முதன்மையானது என்ற சிந்தனையை ஆழமாக விதைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
வட்டி பெரும்பாவம் என்ற சித்தாந்தத்தைக் கொண்டுள்ள முஸ்லிம்களும் வேறு வழியில்லாமல் எதாவது ஒரு வகையில் வட்டியுடன் தொடர்புடைய மக்களாக மாறிவிட்டனர். யாராலும் மறுக்க இயலாத அளவிற்கு எதாவது ஒரு வகையில் வட்டியுடன் புழங்க வேண்டிய கீழ்த்தரமான நிலைக்கு முஸ்லிம் சமூகம் விதிவிலக்கு இல்லாமல் பழகிவிட்டது. இது கடந்த 50 ஆண்டுகளில் திட்டமிட்டு விரிக்கப்பட்ட சர்வதேச சதிவலைகளின் விளைவுகள்.
உலகின் போக்கையும் நமது நாட்டின் திட்டங்களையும் ஆழமாக பார்த்தால் நாளைய நமது சந்ததி வேறு வழியில்லாமல் வட்டியிலேயே உழலப் போகிற ஆபத்தை நாம் உணர்ந்தாக வேண்டும்.
வட்டியை ஹராம் பெரும்பாவம் அபிவிருத்தியை எடுத்துவிடும் முகத்தின் அழகை அகற்றிவிடும் அடுத்தவரின் சாபத்தை அதிகமாக சம்பாதிக்கும் என்றெல்லாம் ஆன்மீக ரீதியாக பேசும் முஸ்லிம்கள்..... இதை அடிக்கடி ஜூம்ஆ மேடைகளில் ஆக்ரோஷமாக பேசி சொந்த சமூகத்திடம் அடிவாங்கிக்கொள்ளும் ஆலிம்கள் இதற்கான மாற்றுத்திட்டங்களை பொது சமூகத்திற்கும் அரசிற்கும் ஆதாரப்பூர்வமாக முன்வைக்க வேண்டும்.

வட்டி தான் அத்துனை சிக்கலுக்கும் மூல காரணம் என்றும் அது ஒரு பெரும்பாவம் என்றும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு நுட்பமாகவும் ஆதரப்பூர்வமாகவும் கற்றுக் கொடுக்கும் திட்டங்கள் முஸ்லிம்களிடம் வேண்டும். அதேபோல வட்டியிலேயே ஊறிப்போயுள்ள அரசின் கொள்கை முடிவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை கொண்டு வரும் நீண்டகாலத் திட்டங்களை அரசிற்கு நாம் வகுத்து கொடுத்து அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும். அதற்கான தகுதி நமக்கு வேண்டும்.
அரசின் அனைத்து துறைகளுக்கும் இலகுவான வட்டித் தொடர்பு இல்லாத திட்டங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் முஸ்லிம்களால் முன்வைக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்வியை நம் சமூகத்திற்குள் ஆழமாக எழுப்ப கடமைப்பட்டுள்ளோம்.
அல்குர்ஆன் முன்னிறுத்தும் வாழ்க்கை கலையை நபிகளாரின் சமூக சீர்திருத்தத் திட்டங்களை மனித சமூகத்தில் விதைத்து வழிகாட்டி அதனடிப்படையில் அமையப்பெற்ற வாழ்சூழலில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் உயர்கல்வி கற்பவர்களின் தலையாய கடமை என்ற சத்தியப்பாதையில் கல்வி கற்காமல் வேலைவாய்பிற்கும் காசு சம்பாதிக்கவும் தான் கல்வி என்ற தவறான பாதையில் உயர்கல்வியை கற்றதால் கற்பதால் முஸ்லிம்கள் தங்களுக்குத் தாங்களே இழைத்துக்கொண்ட அநீதி இது.
பொருளியலில் ஆய்வு மேற்கொள்ளும் இன்றைய மாணவர்களிடம் வட்டி என்ற பெரும்பாவத்தை ஒழிக்க வேண்டும் என்ற முயற்சி இல்லாமல் இருப்பதை வைத்தே இந்த வட்டி சித்தாந்தம் முஸ்லிம் பிள்ளைகளின் மூளையில் ஆழமாக ஊடுருவிட்டதை உணர்ந்து கொள்ளலாம்.
உயர்கல்வி என்ற பெயரில் வட்டி அடிப்படையிலான முதலாளித்துவ கோட்பாட்டை தாங்கிப் பிடித்து அதிலேயே தங்களுக்கான வாழ்வாதாரத்தை தேடும் பட்டதாரிகளை உங்கள் வீடுகளில் இனிமேலும் உருவாக்காதீர்கள்.
பட்டினி கிடக்க நேரிட்டாலும் இந்த படுபாதக சித்தாந்தத்தை ஒழிப்பதற்கு நமது அறிவும் நேரமும் காலமும் பயன்படட்டும்.

Write on புதன்கிழமை, 10 அக்டோபர் 2018

‘‘பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட தொகையில் சொற்ப அளவை தவிர பெரும் மொத்த தொகையும் வங்கிக்கு வந்து விட்டது. அப்படியானால் வெறும் 13 ஆயிரம் கோடியை கைபற்றத்தான் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா. இதற்காக நாடு மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர உயிரிழந்துள்ளனர். தினசரி கூலி பெறும் 15 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
பல நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்கள் முடங்கின. லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதற்காக தான் இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா. 13 ஆயிரம் கோடி ரூபாய் சிக்கியதாக கூறும் நிலையில் அதுவும் கூட நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் தற்போது இருக்கலாம் அல்லது அழிக்கப்ப்டடு அழிக்கப்பட்டு இருக்கலாம்’’

Write on புதன்கிழமை, 10 அக்டோபர் 2018

“ரங்கநாத் மிஸ்ரா மற்றும் சச்சார் கமிட்டியை அமைத்த அரசு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு அமைந்தாலும் பிந்தைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது ஜனநாயகக் கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து தவறினால், அது ஜனநாயக ரீதியிலான அரசாக இருக்க முடியாது”