கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்பம்

கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்பம் மாணவி சாதனை
aecd596f-3948-4a11-bb80-272c12fa4c9f S secvpfஇங்கிலாந்து நாட்டின் ஆம்ஸர்டாம் நகரை தலைமை இடமாக கொண்டு ஆர்எல்இஎக்ஸ் (ஆர்இஎல்எக்ஸ்) குரூப் நிறுவனம் இயங்கி வருகிறது.

பெருகி வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், சுகாதாரம் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும் புதிய

தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கான 2015 (ஆர்இஎல்எக்ஸ்) குரூப் என்விராமெண்டல் என்ற போட்டியை அறிவித்திருந்தது. இந்த போட்டி உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்களின் கண்காணிப்பில் நடந்தது.

இதில் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாணவி டெவிலினாதாஸ் சூரிய ஒளி சக்தியை பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக்கி, அதனை வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் வினியோகம் செய்வதற்கான சலினோ என்கிற புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.
இந்த புதிய கண்டுபிடிப்பில் சூரிய ஒளி சக்தி பேனல் உள்ளிட்ட கருவிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்பதாக போட்டியை நடத்தும் குழுவினர் இந்த சலினோ ஆராய்ச்சியை 2–வது இடத்திற்கு தேர்வு செய்து அதற்கு வெகுமதியாக 25 ஆயிரம் டாலர் வழங்கி பாராட்டியுள்ளனர்.