விருதுநகர் பெரிய பள்ளிவாசல்

விருதுநகர் பெரிய பள்ளிவாசல் கல்வி கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தேன் .அன்று மதியம் கல் பள்ளிவாசலில் லுஹர் தொழுகை முடித்து பள்ளிவாசலின் கட்டிட அமைப்பை பார்த்தேன்.

ஒரு பக்கம் பெருமையும் மறுபக்கம் சமுதாயத்தின் இன்றைய நிலையை நினைத்து கவலையும் வேதனையும் ஏற்பட்டது. 

50 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் சமூகம் வீடு பள்ளிவாசல்

கட்டுகின்ற போது அதற்கு இஸ்லாமிய அடையாளத்தைக் கொடுத்து தனது பாரம்பரிய கட்டிடக் கலையை பயன்படுத்தியது. அதன் நிலைத்தன்மை (Stability) காலம் 500 ஆண்டுகளுக்கு மேலாக   இருந்தது.                                   10373526 649370331799403 1493746347388829305 n                                                 . 10334457 649370421799394 7392459154788973170 n

கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து காட்டப்படும் இன்றைய பள்ளிவாசல்களின் காலம் 50 ஆண்டுகள் மட்டுமே. ஐரோப்பியக் கட்டிட தொழில்நுட்பம் நமது பாரம்பரிய அறிவைச் சிதைத்துவிட்டது.

50 ஆண்டுகளில் உளுத்துக் கொட்டிபோகும் சிமெண்ட் தொழில் நுட்பத்தை புகுத்தி எந்த ஒரு கட்டிடமும் அதன் பாரம்பரிய வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு உணர்த்திவிடக்கூடாது என்ற சதி திட்டத்தை விதைத்து வெற்றி கண்டு விட்டார்கள். 

இது போன்ற பள்ளிவாசல்கள் இன்றும் பல முஸ்லிம் ஊர்களில் கம்பீரமாக காட்சி தருகின்றன.நெஞ்சை நிமிர்த்தி இது எங்களது இறைவனின் அருட்கொடை.....அதோடு எங்களது முன்னோர்களின் விலைமதிப்பில்லாத கட்டிடக்கலை நுட்பத்தின் சாதனைகள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

இன்று கட்டப்படும் பள்ளிவாசல்களை அடுத்த தலைமுறை அதுபோல பெருமையோடு சொல்லிக்கொள்ள இயலுமா...? 

வசதியுள்ளவர்கள் தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய வரலாறு இந்திய முஸ்லிம்களின் வரலாறு போன்றவற்றைச் சொல்லிக்கொடுத்து B.Arch (ஆரக்கிடெக்ச்சர்) 5 ஆண்டுகள் படிக்க வைத்து மேல்படிப்பிற்கு வெளிநாடுகளில் Islamic Architecture 
(இஸ்லாமிக் ஆரக்கிடெக்ச்சர் ) அல்லது Vernacular Architecture (பாரம்பரிய கட்டிடக் கலை) படிக்கவைக்க வேண்டும்.

சகோதரர்களே இன்ஷா அல்லாஹ்.... இனி.... நீங்கள் வீடு அல்லது உங்கள் ஊரில் பள்ளிவாசல் கட்டினால்.... இஸ்லாமியக் கட்டிடக்கலையின் வடிவத்தில் நமது மண்ணின் பாரம்பரிய கட்டிட நுட்பத்தை பயன்படுத்திக் கட்டுங்கள்.

இறைவனின் உதவியோடு..... இழந்ததை மீட்டெடுப்போம் ......!