பள்ளிவாசலுக்கு வருகை தரும் ஜெர்மனியர்கள்

german - in masjid
ஜெர்மனில் வாழும் முஸ்லிம் சமூகம் இஸ்லாம் குறித்த பிழையான புரிதலை களைவதற்காகவும் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இடையில் உரையாடலை ஊக்குவிப்பதற்காகவும் தங்களது பள்ளிவாசல்களைத் திறந்து வைத்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள இஸ்லாமிய கூட்டமைப்பு ஜெர்மனி முழுவதும் சுமார் ஆயிரம் பள்ளிவாசல்களில் "Open Mosque Day” என்ற நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
பெர்லினில் உள்ள அஹ்மத் ஃபவாத் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் முஸ்லிம் விரோத உணர்வுகளின் மூலம் முஸ்லிம்கள் குறித்த அச்சம் ஜெர்மனியர்களிடம் தோன்றியுள்ளது.
இஸ்லாம் குறித்த பயத்தைப் போக்கும் சிறந்த வழி இஸ்லாம் குறித்து அதிகமாக உரையாடுவது. இஸ்லாம் என்பது அவர்கள் தொலைக் காட்சிகளில் எதைப் பார்க்கிறார்களோ அது அல்ல. இஸ்லாம் அமைதியின் மார்க்கம் அன்பின் மார்க்கம் என்று கூறினார்.
இந்த நிகழ்வின் போது விருந்தினர்களின் இஸ்லாமிய நம்பிக்கை, இஸ்லாமிய கலாசாரம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இமாம்கள் பதில்களை வழங்கினர்.
81.8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜெர்மனி ஐரோப்பிய நாடுகளில் ஃபிரான்ஸ்க்கு அடுத்து முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு. ஜெர்மனியில் வாழும் 4 மில்லியன் முஸ்லிம்களில் 3 மில்லியன் மக்கள் துருக்கி பின்னணியைக் கொண்டவர்கள்.