மொழிகள்


வர்த்தகமயமான உலகில் சிறப்பாக வளரும், வளர்ந்த நாடுகளின் மொழிகளை கற்றுக்கொள்தல் அவசியம். நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் பெருகியுள்ள காலகட்டத்தில், சர்வதேச தொடர்புகள் ஒரு சாதாரண விஷயமாக ஆகிவிட்டன. எனவே, தாய்மொழி தவிர்த்த இன்னொரு உலக மொழியிலும் புலமைத்துவம் பெறுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள நாம் முயலும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம். ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள நாம் நேரத்தையும், சக்தியையும் செலவழிக்கிறோம். எனவே, அந்த மொழியால் நமக்கு கிடைக்கும் நன்மையையும் கருத்தில் கொள்வது முக்கியம். ஒருமொழியினுடைய இயற்கை ஆற்றல் மற்றும் அதற்கிருக்கும் தேவை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலையில் ஆங்கிலம் தவிர்த்து, அரபி, பிரான்ஸ், ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் சீன, கொரியா, ஜப்பான் மொழிகள் இன்றைய நிலையில் முக்கியமான உலகளாவிய மொழிகளாக திகழ்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களில் இத்தகைய மொழிகளில் ஏதேனும் ஒன்று தெரிந்திருந்தாலே நல்ல முக்கியத்துவம் கிடைக்கிறது.

மொழி பெயர்ப்பாளர், விளக்கவுரையாளர், மொழி ஆசிரியர் மற்றும் மொழியியல் வல்லுநர் ஆகிய பணி வாய்ப்புகள் பன்மொழி வித்தகர்களுக்கு காத்துக் கொண்டுள்ளன. வெளிநாட்டு மொழிகளில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு, சுற்றுலாத் துறை, பொதுமக்கள் தொடர்பு துறை, தூதரகங்கள், ராஜதந்திர பணிகள் மற்றும் பப்ளிஷிங் துறை போன்ற பலவிதமான பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.
ஒரு உடனடி மொழிபெயர்ப்பாளர்(Interpreter), ஒரு மணிக்கு ரூ.1000 முதல் ஒரு நாளுக்கு ரூ.25,000 வரை சம்பாதிக்கிறார். அதேநேரம் ஒரு Translator, ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்ற கணக்கில் சம்பாதிக்கிறார்.

வெளிநாட்டு மொழி வல்லுநர்கள், ஐடி மற்றும் Offshoring நிறுவனத்தில், அவருக்கு தெரிந்துள்ள மொழி மற்றும் அதிலுள்ள புலமை ஆகியவற்றின் அடிப்படையில், நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

சில வெளிநாட்டு மொழிகள், அதுசார்ந்த படிப்புகள் மற்றும் அதை வழங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

* Arabic - BA - University of Delhi - www.du.ac.in
* Bulgarian - Advanced Diploma - Goa university - www.unigoa.ac.in
* Chinese- Diploma - University of Calcutta - www.caluniv.ac.in
* Chinese - Diploma/Certificate - Chinese Language Institute - www.chinese.in
* French - BA - University of Delhi - www.du.ac.in
* French - Certificate - Madurai Kamaraj University - www.mkudde.org
* French - Diploma/Certificate - Alliance Française - www.afindia.org
* German - Diploma - University of Calcutta - www.caluniv.ac.in
* German - Certificate (PT) - Guru Nanak Dev University - www.gndu.ac.in
* German - Diploma/Certificate - Gothe Institute - www.gothe.de
* Italian - Diploma/Certificate - Italian Cultural Institute - www.iicnewdelhi.esteri.it
* Japanese - Diploma - University of Delhi - www.du.ac.in
* Japanese - Diploma/Certificate - Mombusho Scholar's Association of India - http://momo.jpf.go.jp/jlpt
* Spanish - Diploma/Certificate - Instituto Hispania - http://institutohispania.com
* Various - Diploma/Certificate - YMCA - www.newdelhiymca.org
* Various - Diploma/Certificate - Bharatiya Vidaya Bhawan - www.bhawans.info