மாநில அரசுகளை...ஏழைகளை...முடக்கும் ஜிஎஸ்டி!

ஜிஎஸ்டி-க்கு பின் மாநில அரசியலுக்கான எதிர்காலம் கேள்விக்குறியாக உருவாகியுள்ளது. குறிப்பாக மாநிலங்களின் நிதி அதிகாரம் மொத்தமும் மத்திய அரசு வசம் சென்றுள்ளது. இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்பு (திமீபீமீக்ஷீணீறீ stக்ஷீuநீtuக்ஷீமீ) கொண்ட நாட்டில் மாநில அரசுகளின் உரிமைகளில் ஜிஎஸ்டி அமலாக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதன் மூலம் தனது முதன்மையான அதிகாரத்தையும், உரிமையையும் மாநில அரசுகள் முழுமையாக மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டன என்பதை பல நிபுணர்களும் சொல்லிவருகின்றனர் என்கிறபோது, மாநிலக் கட்சிகள் ஏன் இதை கண்டு கொள்ளாமல் விட்டன என்கிற கேள்வி எழுகிறது.
மாநில மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு அந்தந்த மாநில அரசுகளுக்கு நிதி தேவையாகும். இதற்கு மாநில அரசின் வரி விதிப்பு அதிகாரம் அவசியமாகும். மாநிலத்தில் மக்களை ஆள தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மக்களுக்கான செயல்திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசின் வரி வேண்டும். இது இயல்பான மக்களாட்சி மற்றும் அரசியலமைப்பு முறையாகும். இந்த விஷயத்தில் மாநில உரிமையை விட்டுக்கொடுத்தல் என்பது பெரும் தவறாகும்.
பல நாடுகளில் வெற்றிகரமாக ஜிஎஸ்டி-யை அமல்படுத்தியுள்ளார்களே, இந்தியாவில் ஏன் முடியாது? என்று சில நண்பர்கள் கேட்டனர். உண்மையில் இது தவறான வாதமாகும். ஐக்கிய அமெரிக்கா (ஜிலீமீ ஹிஸீவீtமீபீ ஷிtணீtமீs ஷீயீ கினீமீக்ஷீவீநீணீ) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (ணிuக்ஷீஷீஜீமீணீஸீ ஹிஸீவீஷீஸீ) தான் உலகின் இரு பெரிய சந்தை. இவ்விரு ஒன்றியங்களிலுமே ஜிஎஸ்டி (சரக்குகள் மற்றும் சேவைக்கான வரி) இல்லை. அமெரிக்காவில் உள்ள மாகாணங்களும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளும் தங்கள் அதிகாரங்களையும் உரிமையும் ``ஒரே வரி” என்கிற அமைப்பில் சரணடைவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாகும்.
ஜிஎஸ்டி என்பது, மக்களின் செலவின் மீது விதிக்கப்படும் வரியாகும், அதாவது அனைவரின் மீதும் வரி திணிக்கப்படுகிறது, இந்தியா வசதியான நாடு கிடையாது. ஏழைகளை அதிகமாகக் கொண்ட நாடு, இதன் மூலம் அனைத்து மக்களிடமிருந்து மறைமுகமாக வரி பெறப்படுகிறது, அதாவது வசதியில்லாத அனைத்து மக்களிடமும் அவர்களின் அத்தியாவதிய உணவு பொருள்கள் மீதும் வரி வசூலிக்கப்படுகிறது, அமெரிக்கா போன்ற நாடுகள் நேரடியான வரிகளை சார்ந்து இயங்குகிறது. அதாவது வருமான வரியை வசதியாக உள்ள மக்களிடம் இருந்து பெறுகிறது. அதுதான் சரியான பங்களிப்பு. இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, சில மாநிலங்களில் விற்பனை வரிகள் இருக்கிறது. அவர்களின் முதன்மையான வரி அமைப்பு என்பது நேரடியான வரி அமைப்பாகும். ஆனால் இந்த ஜிஎஸ்டி வரியின் மூலம், அனைத்து வசதியற்ற மக்களிடம் இருந்தும் மறைமுகமாக வரி வசூலிக்கிறது.
சுரேஷ் சம்பந்தம் நன்றி தமிழ் இந்து