பெண் கல்வியாளர்களை உருவாக்கும் (B.I.S.Ed) பட்டப்படிப்பு;

  அறிவு, ஆன்மீகம், கலாசாரம் போன்ற அனைத்து மனித விழுமியங்களையும் தலைமுறைகளுக்கு எளிதாக கடத்தும் ஆற்றலை இறைவன் எளிதாக்கி

பெண்களுக்கு வழங்கியுள்ளான். அவர்களின் வாழ்வியல் கடமையாகவும் அதை ஆக்கியுள்ளான்.

   உயர்ந்த தலைமுறைகளை உருவாக்கும் பெண் என்ற இந்தப் படைப்பாளிக்கு பாதுகாப்பாளனாக பராமரிப்பவனாக ஆணை ஆக்கியுள்ளான். அதனால்தான் இறைவன் தனது திருமறையில் பெண்னை “விளைநிலங்கள்” என்று வர்ணித்து அவற்றுக்கு கூடுதல் பாதுகப்புத் தேவை என்று வலியுறுத்துகின்றான். அப்படிப்பட்ட பெண் சமூகத்தை முறையாகப் பயிற்றுவித்து வளர்தெடுத்தால் அடுத்தடுத்த முஸ்லிம் தலைமுறை மார்க்கப் பேனுதல் மிக்க சமூகமாக உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

      தமிழக முஸ்லிம்களின் இன்றைய தவறான கல்வி முறையை மாற்றுவதற்கு; அதாவது ஆரம்பப் பள்ளிமுதல் இஸ்லாமியப் பாடத்தை இணைத்தே கற்றுத் தந்து ஹலாலான வழியில் மாற்றுவதற்கு நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நர்ஸரி பிரைமரி பள்ளிக் கூடங்கள் தேவை.

     இந்தப் பள்ளிக்கூடங்களை திறன்பட நடத்துவதற்கு, அவற்றில் ஆசிரியைகளாக பணியாற்றுவதற்கு இன்னும் தமிழக கல்வித் துறையை ஆளுமை செய்வதற்கு, பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கல்வித் துறையை நோக்கி உருவாக்கப்பட வேண்டும்.

   இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திடும் இந்தத் துறையில் ஆளுமை செய்வதற்காக உருவாக்கப்பட்ட 3 ஆண்டு பட்டப்படிப்பு தான் B.I.S.Ed (Bachelor Of Islamic School Education).

+2 முடித்தவர்களுக்கு 3 ஆண்டு , 10th முடித்தவர்களுக்கு 5ஆண்டு

B.I.S.Ed