10, +2 எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்!

 10 2 எபபத வணடமனலம படககலம

தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கு (National Institute of Open Schooling) நாடு முழுவதும் 19 மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிக்கான சென்னை மண்டலம் அண்மையில்தான் தொடங்கப்பட்டது.

குறைந்தபட்சம் 14 வயது நிரம்பிய எவர் வேண்டுமானாலும் தேசியத் திறந்தநிலைப்

பள்ளியில் 10ஆம் வகுப்பு சேரலாம். எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும். இதற்கு அவர்களே சுயஉறுதிமொழி அளிக்கலாம். வயது வரம்பு ஏதும் கிடையாது.

பிறந்த தேதிக்கு மட்டும் அத்தாட்சி சமர்ப்பிக்க வேண்டும். தேசியத் திறந்தநிலைப் பள்ளியின் இணையதளத்தில் (www.nios.ac.in) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 5 பாடங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் ஒன்று அல்லது 2 பாடங்கள் மற்றும் கணிதம், அறிவியல்-தொழில்நுட்பம், சமூக அறிவியல், பொருளாதாரம், வர்த்தகக் கல்வி, மனையியல், உளவியல், இந்திய கலாசாரம்,

ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரேசன்ஸ-இவற்றில் தங்களுக்குப் பிடித்தமான 3 அல்லது 4 பாடங்களைத் தேர்வுசெய்து கொள்ளலாம். மேலும், விருப்பமான ஒரு தொழில்கல்விப் பாடத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

அட்மிஷன், புத்தகம் உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து கட்டணம் ரூ.1,030. பெண்கள் என்றால் ரூ.780, எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.580 மட்டுமே. கட்டணத்தை ஆன்லைனில் நெட்-பேங்கிங் மூலமாகவோ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்திவிடலாம். அட்மிஷன் போட்டுவிட்டால் வீட்டு முகவரிக்கு புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.

இதேபோல், பிளஸ்-2 சேர வேண்டுமானால் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ.1,130. பெண்களுக்கு ரூ.930. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மற்ரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.655 மட்டும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் ஏதேனும் ஒன்று அல்லது 2 பாடங்களையும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்கவுண்டன்சி, ஓவியம், மனையியல், உளவியல், சுற்றுச்சூழல், மாஸ் கம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆபரேஷன்ஸ் ஆகிய 18 பாடங்களில் ஏதேனும் 3 அல்லது 4 பாடங்களை தேர்வுசெய்து படிக்கலாம். விரும்பம் இருந்தால் கூடுதலாக 2 பாடங்கள் எடுத்தும் படிக்கலாம்.

வகுப்புகளுக்கு விருப்பம் இருந்தால் செல்லலாம். கட்டாயமில்லை. சேர்க்கை மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஒன்று. செப்டம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை ஒன்று இரு நிலைகளில் நடக்கிறது. தமிழ்வழியில் பாடங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இப்பணி முடிந்ததும் தமிழக மாணவர்கள் தமிழ்வழியிலும் படிக்கலாம்.

தகவல் : சென்னை மண்டல இயக்குனர் பி. ரவி. சந்தேகங்களுக்கு: சென்னை மண்டல அலுவலகத் தொலைபேசி எண்: 044-28442237