ஜியாலஜி

geology

இந்தியாவில் கனிமவளம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அதிகம். கனிமத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இத்துறையில் வல்லுனர்களை

உருவாக்கும் நோக்கில்  குறிப்பிட்ட சில இடங்களில் உயர்கல்வி நிலையங்கள் இது சார்ந்த பட்டம், பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளை நடத்தி வருகின்றன. பூமியைப் பற்றிய அறிவியல், புவியியல் எனப்படும். பூமி, பூமியின் மேற்புறம், பூமியின் மையம், பூமியின் வடிவம், பூமியில் புதைந்துள்ள கனிமம், தாதுக்கள் இவற்றைப் பற்றிப் படிப்பது புவியியலாகும். மொத்தத்தில் பூமியைப் பற்றிய வரலாறு இது. இதில் ஜியோ கெமிஸ்ட்ரி, ஜியோ பிஸிக்ஸ், பாலியோன்டாலஜி படிமங்கள் பற்றிய படிப்புக்கள் சொல்லித் தரப்படுகின்றன. இவற்றைப் படிப்பவரை ஜியாலஜிஸ்ட் என்று கூறுகின்றனர். உலகின் தாதுவளங்கள் மற்றும் இயற்கை வளங்களை அறிவதில் ஜியாலஜிஸ்டுகள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

பட்டப்படிப்பு படிக்க பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல் படித்திருப்பது அவசியம். பட்டமேற்படிப்பை மேற்கொள்ள துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு

ஜியாலஜி மிகவும் சுவாரஸ்யமான, வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள துறை. ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கமிஷன், மினரல்ஸ் மற்றும் சுரங்கத் துறை. சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனங்கள், இயற்கை வள நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில்

கற்பிக்கப்படுகிறது