உளவியல்

psychology

உளவியல் என்ற இந்தப் படிப்பு மிகவும் பயனுள்ள படிப்பாகும். மனிதனை இயக்குவது அவனது உள்ளம்தான். இஸ்லாம் இதை நஃப்ஸ்

என்று கூறுகின்றது.

மனிதர்களின் உள்ளங்கள் சீராக, அமைதியாக, ஆன்மீகமாக, இருந்தால் இந்த உலகமே அமைதிப் பூங்காவாக மாறிவிடும், அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படி கூறினார்கள்.

உடலில் ஒருபாகம் உள்ளது, அந்த பாகம் சீராக இருந்தால் ழுமு உடலும் சீராகும், அந்த பாகம் சீர்குலைந்தால், முழு உடலும் சீர்குலைந்துவிடும்என்றார்கள். அது எந்த பாகம் என்று தோழர்கள் கேட்டனர்.

மனிதனது உள்ளம்என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : புகாரி, முஸ்லிம்)

அவசரமும், பரபரப்பும் நிறைந்த இன்றைய மக்களின் வாழ்க்கை முறை, குறுக்கு வழியில் பொருளைத் தேடுவதும் சொகுசு வாழ்க்கையுமே வாழ்விற்கான இலக்கு என்ற வெறியும் சேர்ந்து மக்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றியதால் இளம் வயதிலேயே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவருகின்றனர். இதனால் குடும்ப வாழ்வில் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி மீள வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

இனிவரும் காலங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் பெருக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் சங்கடங்களை சந்திக்கும் மக்களுக்கு PSYCHOLOGY படித்த சிறந்த உளவியல் ஆலோசகர் மூலம் சிகிச்சை அளித்து அவர்களை குணப்படுத்த முடியும்.

அதிலும் இன்றைய உளவியல் PSYCHOLOGY பாடம் மேற்கத்திய சிந்தனை ரீதியிலான கருத்துக்களை தீர்வாகக் கொண்டது. இதோடு இஸ்லாமிய உளவியல் (ISLAMIC PSYCHOLOGY) பாடத்தையும் சேர்த்து படித்தால் மனிதனின் உள்ளம் தொடர்பான சிக்கலுக்கு சரியான தீர்வு அளிக்க முடியும்.

அழகப்பா பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியாக வழங்கும் B.Sc. PSYCHOLOGY என்ற உளவியல் பாடத்தோடு இஸ்லாமிய உளவியல் பாடத்தையும் சேர்த்து படிப்பதற்கு அம்மாபட்டிணம் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரியில் B.I.S.Ed PSYCHOLOGY என்ற படிப்பு பறிற்றுவிக்கப்படுகிறது.

www.annaikhadeeja.in