ரப்பர் டெக்னாலாஜி

Rubber

இன்றைய மனித சமூகம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் பிளாஸ்டிக் முக்கிய பங்கு வகுக்கிறது.எந்தப் பொருளுக்கும் வடிவமைப்பு அவசியம்.

அதைத் தொடர்ந்து அதைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான கருவிகள் மற்றும் அச்சுவார்ப்பு அவசியம்.

அந்த வகையில் பிளாஸ்டிக்கை பன்படுத்தி பல்வேறு தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்குத் தேவையான பொருட்களாக மாற்றி பயன்படுத்தப்படுகிறது.

பலரும் பயணிக்கும் டூவீலர்களில் துவங்கி கார், பேருந்து, லாரி, சைக்கிள், விமானம் என அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும் பயன்படுவது ரப்பரின் முழுமை பெற்ற வடிவம்தான் டயர்.

செயற்கை அல்லது இயற்கை கிடைக்கும் ரப்பரை தேவைப்படும் பல்வேறு பொருட்களாக மாற்றி அமைக்கும் இன்ஜினியரிங் பிரிவுதான் ரப்பர் டெக்னாலஜி. இதில் ரப்பரின் வகைகள், தன்மை மற்றும் ரப்பர் பொருட்களை தயாரிப்பது குறித்துப் படிக்க வேண்டியிருக்கும். இன்று இந்தியாவில் கிட்டத்தட்ட 6000 ரப்பர் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்தியாவில் பெரும் வளர்ச்சி அடைந்து வரும் ஆட்டோமொபைல் துறை மற்றும் ரப்பரை பயன்படுத்தும் பல துறைகளின் காரணமாக இந்தியாவில் ரப்பர் டெக்னாலஜி படிக்கும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

படிப்பு மற்றும் தகுதிகள்: ரப்பர் டெக்னாலஜியில் பி.இ.இ பி.டெக். படிக்க பிளஸ் 2ல் இயற்பியல்இ வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும்.

பிளாஸ்டிக் இன்ஜினியரிங் படிப்பை தரும் கல்வி நிறுவனங்கள்:

 சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் அன்ட் டெக்னாலஜி, அவுரங்காபாத் - இந்நிறுவனம் ஐ.எஸ்.ஓ 9001: 2008 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. இந்நிறுவனம் அகமதாபாத் அம்ரிஸ்ட், அவுரங்காபாத், போபால் புபனேஸ்வர் சென்னை, குவுகாத்தி, இம்பால், ஜெய்பூர், கொச்சி, லக்னோ, மைசூர் என 16 மையங்கள் உள்ளன. அனைத்து மையங்களிலும் சிறப்பான வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படுகின்றது.

www.cipet.gov.in

 சென்னைஇ அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ரப்பர் அன்ட் பிளாஸ்ட் படிப்பு வழங்கப்படுகிறது.

www.annauniv.edu

ஹார்கோர்ட் பட்லர் டெக்னாலஜிக்கால் இன்ஸ்டிடியூட்இ கான்பூர் - இங்கு பிளாஸ் டெக்னாலஜி படிப்பு வழங்கப்படுகிறது. பி.எஸ்சி.இ கெமிக்கல் டெக்னாலஜி மூன்று வருட படிப்பாக வழங்கப்படுகிறது.

பி.டெக்.இ 4 வருட படிப்பாகவும் வழங்கப்படுகிறது.

www.hbti.ac.in

* நார்த் மகாராஷ்ட்ரா பல்கலைக்கழகம்இ 1990ல் தொடங்கப்பட்டது இப்பல்கலைக்கழகம்.

www.nmu.ac.in